பக்கம்:ஓடி வந்த பையன்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10

பூசிக்கிட்டு, ஒட்டம் பிடிக்கத் தலைப்பட்டிட்டானே!... அந்தச் சீனுக்காரனுங்க பட்ட கஷ்டங்களை இப்ப நெனச்சாலும் எனக்கு ரொம்பக் குஷியாயிருக்குதுங்க!”

வெகு மிடுக்குடனும் கம்பீரத்துடனும் பேசினான். “நான் வடக்கே லடாக் பகுதியிலே இருந்த வரைக்கும் ஒரு சீனன் மூச்சுக் காட்டவேணுமே!... நம்ப மண்ணிலே ஒரு துளி எடுக்கிறதுக்கு அவன் யாருங்க? மேஜையில் ஓங்கிக் குத்தினன்.

இரண்டு பில்கள் அவனுக்குப் பயந்துகொண்டு ஒடினவோ? - அவனா விட்டுவிடுபவன் ?

“பலே பாண்டியா !” என்ற குரல் கேட்டுத் திரும்பினான் உமைபாலன்.

நேற்று கல்லாவில் காட்சியளித்த இளைஞன் நின்றன். முகத்தில் சிரிப்பு. கண்களிலே கனிவு. “ உன் மாதிரிச் சிறுவர்களைத்தான் நம் நேருஜி எப்போதுமே நேசிப்பார். நேருஜி இருக்கும்வரை இந்தச் சீனன் நம் பக்கம் தலைவைத்துக்கூட படுக்க மாட்டான், தம்பி ! ... உன்னுடைய தாய்நாட்டுப் பற்று ரொம்பவும் உயர்வு ! ..." என்று போற்றினான்.

பையனுக்குப் போன உயிர் திரும்பியது.

பிறகு, பெரியவருடன் அவ்விளைஞன் ஏதோ பேசினன். “ நீ சொன்னச் சரிடா கோபு!" என்று முடிவு வெளியிட்டார் அவர்.

கோபு குதூகலத்துடன் திரும்பினன். "தம்பி! உள்ளே வா !” என்று அழைத்துச் சென்றான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓடி_வந்த_பையன்.pdf/15&oldid=1161931" இலிருந்து மீள்விக்கப்பட்டது