பக்கம்:ஓடி வந்த பையன்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

17

உமைபாலன் திரும்பவும் சிரித்தான். “ராஜ் ! ஜாலியாக இருப்பது என்றால் முதலிலே அதற்கு விளக்கம் சொல்லு, கேட்கலாம் !"

“ஜாலியாக இருப்பதின்னா, மூக்குப் பிடிக்கச் சாப்பிடுவது, ஊர் சுற்றுவது, சாயந்திரம் இரண்டு ஆட்டம் சினிமா பார்ப்பது, அரட்டை அடிப்பதுன்னு அர்த்தம் !”

"பேஷ்!...."

“ ம்...நீ ரெடியா ?”

“ உன் திட்டத்துக்கு வசதி ... ?”

“ நான் என் செலவுக்கு ரெண்டு ருவா வச்சிருக்கேன். ! "

"என் கிட்டே பைசா கூட இல்லியேப்பா !”

“ நான் தர்ரேன்!”

“ உனக்கு ஏது உபரிப்பணம் ? ”

“ ஏய் ! அதைப்பத்தி யெல்லாம் உனக்கு ஏன் வம்பு ? ... உனக்கு என்னைப்பத்தி முதலிலே சொல்லியாகவேணும் ... சரி, நீ குளிச்சிட்டுப் புறப்படு!... நானும் ரெடியாகிடுறேன் !...”

அப்போது "அப்துல்லா!" என்று அழைத்தான் ஜெயராஜ்.

சிறுவன் ஒருவன் வந்தான்.

அப்துல்லாவையே மாறாமல் பார்த்தான் உமைபாலன். தொப்பியோ, கைலியோ இல்லாமல், கிராப்புத் தலையுடன் ஹிந்துப் பையன் போலவே இருந்தான் அவன். இம்மாதிரி வேலைக்கெல்லாம் இந்தப் பக்கத்தில் இம்மாதிரி வேஷம்தான் லாயக்கு

ஒ.வ.பை-2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓடி_வந்த_பையன்.pdf/22&oldid=1162591" இலிருந்து மீள்விக்கப்பட்டது