பக்கம்:ஓடி வந்த பையன்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34

"கருணுகரா!.."

"... ... ..."

“மகனே! ... கருணுகரா !..."

உமைபாலன் சீற்றத்துடன் தலையை உயர்த்தினான். “ யார் உமது மகன்?” என்று ஆங்காரமாகக் கேட்டான்.

“நீ ! ... நீதான் என் மகன் ! ... " என்று. நெஞ்சு வெடிக்க விம்மினர் காரைக்கால் மனிதர் !

“நானாவது உம் மகனாவது ! ... உமக்குப் பைத்தியமா ஐயா ?" சிரித்தான் சிறுவன் ! ...

என்ன அதிசயம் இது ? ...

சுற்றி நின்றவர்கள் மூக்கில் விரலை வைத்தனர்; குழப்பம் அடைந்தனர்.

சிறுவர்கள் ஜெயராஜ், அப்துல்லா, காளி முதலியவர்கள் உமைபாலனேயே இமை வலிக்கப் பார்த்தார்கள். 'உங்க அப்பாகூட இப்படி ஒருநாள் வந்து உன்னை அழைச்சுக்கிட்டுப் பறந்திடுவார் ! நீ கொடுத்து வச்சவனப்பா!' என்று ஏக்கப் பெருமூச்சுடன் செப்ப, !" நீ போடா! ... என் கதையே தனியடா ! ... நான் ராஜா! டே, அப்துல்லா !... இப்ப நடக்கிற நாடகத்திலே கட்டாயம் ஏதோ ஒரு ரகசியம் இருக்கணும்டா!" என்று பேச்சுக்குப் பேச்சு, ஆளை அறிந்து ‘டா’ போட்டு அந்த வெற்றியிலேயே கர்வம் கொண்டு நின்றான் ஜெயராஜ்.

அப்போது, வாசலில் யாரோ சிலர் சாப்பாட்டு டிக்கட் கேட்பதறிந்து விரைந்து, மேஜை மீதிருந்த டிக்கட்டுகளைக் கிழித்துக் கொடுத்தான். கொடுக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓடி_வந்த_பையன்.pdf/39&oldid=1165361" இலிருந்து மீள்விக்கப்பட்டது