பக்கம்:ஓடி வந்த பையன்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

49

“ பணம் இருக்கட்டும். நான் இந்தப் புதிய உலகத்திலேருந்து படிச்சுக்கிட வேண்டியது ரொம்ப இருக்கு. நான் இங்கேயேதான் இருப்பேன்!” என்றான் உமைபாலன். வெறுங்கையுடன்“ வீட்டைத் துறந்து புறப்பட்ட அவனுக்கு நடந்த சம்பவங்கள் மீண்டும் தோன்றின.

காரைக்கால் அன்பர் மீண்டும் கலவரம் அடைந்தார். அவர் ஐயரைப் பரிதாபமாய்ப் பார்த்தார்.

“ தம்பி ! இத்தனை வயசிலே நான் இதுவரை அறிஞ்சிராத இரண்டு அதிசயங்களை இங்கே கண்டேன். பணக்காரப் பிள்ளையான நீ அநாதை ஏழைப் பிள்ளையாய் நடிச்ச. ஆனா, அந்தப் பையன் ஜெயராஜோ ஏழையாய் இருந்து, மனசைப் பெருக்காமல் ஆசைகளை மட்டும் பெருக்கிக்கிட்டு, பணக்காரப் பிள்ளையாய் நடிச்சான்! இரண்டுக்கும் எத்தனை எத்தனையோ வித்தியாசம் இல்லேயா ? ... தம்பி! நீ ஊருக்குப் போயி உங்க அப்பா அம்மா இஷ்டப்படி அங்கேயே தங்கி நல்லா படி. அப்புறம் இன்னும் தெளிவாயும் சுலபமாயும் இந்த லோகத்தைக் கத்துக்கலாமே! பின்னே, நீ இஷ்டப்பட்டாலும் இங்கே வரலாம். இது உன் சொந்த ஹோட்டல்.

கனபாடி ஐயர் சிரித்தபடி நிறுத்தினர். சிறுவன் உமைபாலனை ஆசீர்வாதம் செய்தார். புறப்பட வழியனுப்பினர். அவன் சம்பளம் அவன் சட்டைப் பையில் இருந்தது.

நகைகள் பளிச்சிட ஜம்மென்று புறப்பட்டான் உமைபாலன். பிச்சைக்காரத் தங்கை பூவழகியும் அவனுடன் புறப்பட்டாள் !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓடி_வந்த_பையன்.pdf/54&oldid=1140606" இலிருந்து மீள்விக்கப்பட்டது