பக்கம்:கடல்வீரன் கொலம்பஸ்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

81

கப்பட்டு அடைபட்டுக்கிடந்த இளைஞர்களையும், இளம் பெண்களையும் கண்டார்கள். அப்படி அடைபட்டுக்கிடந்த சில பெண்களையும் பையன்களையும் ஸ்பானியர்கள் விடுவித்துத் தங்கள் கப்பல்களுக்கு அழைத்து வந்தார்கள். அவர்கள், பின்னால், மொழி பெயர்ப்பாளர்களாகவும் வேறு பல வேலைகளுக்கும் பயன்படுத்தப்பெற்றார்கள்.

கன்னிமேரியிடம் பக்தி கொண்ட கொலம்பஸ், அப்போதுதான் கண்டு பிடித்த தீவுகளுக்கெல்லாம் அவளுடைய வெவ்வேறு திருப்பெயர்களைச் சூட்டிக் கொண்டே சென்றான்.

சாண்டாகுரூஸ் என்ற தீவையடைந்த பொழுது, முதன் முதலாக ஸ்பானியர்கள் கரீபியர்களுடன் சண்டையிட நேர்ந்தது. கப்பலிலிருந்து இறக்கிய ஒரு படகில் இருபத்தைந்து பேர் கரையை நோக்கிச் சென்றார்கள். கரையில் நின்ற கரீபியர்கள் நான்கு ஆண்களும் இரண்டு பெண்களும் தான். முதலில் பெரிய பெரிய கப்பல்களைக் கண்டவுடன் அவர்கள் பயந்து ஓடினார்கள். ஆனால், பிறகு தெளிந்து திரும்பிவந்தார்கள். தங்கள் ஒடத்தில் ஏறித் திரும்பிக் கொண்டிருந்த படகை விரட்டிக் கொண்டு வந்தார்கள். வரும்போதே, வில்லில் அம்புகளை நாணேற்றி ஸ்பானியர்களை நோக்கி எய்தார்கள். இரண்டு ஸ்பானியர்கள் காயமுற்றார்கள். ஒருவன் உயிருக்கு ஆபத்தான நிலையில் படுகாயமடைந்தான். நெருங்கிவந்தவுடன், கப்பல் படகு திருப்பித் தாக்கிய வேகத்தில், ஓடம் கவிழ்ந்தது. கடலில் வீழ்ந்த கரீபியர்கள் நீந்திச் சென்று ஒரு பாறையை' அடைந்தார்கள். ஸ்பானியர்கள் விரட்டிக் கொண்டு சென்று அவர்களைப் பிடித்துக் கப்பலுக்குக் கொண்டு வந்தார்கள்.

அந்தக் கரீபியர்களில் பெரு முரடனான ஒருவனைக் கப்பல் மேல் தட்டில் நிற்கவைத்துச் சுட்டார்கள். குண்டு