1 12 கட்டுரை வளம்
‘உன் தீமை இன்று அழிந்தது; அமரர்களுக்கும் அறத் தின் வழியே அல்லாமல் மறத்தின் வழியே அரும்போரில் வெற்றி பெறுதல் என்பது இயலாத செயலாகும். ஆதலின், சிறைகொண்ட சீதையை விடுவித்து, வீடணனுக்கு முடி சூட்டி வாழ்க, அன்றேல் ஆற்றல் முழுதும் காட்டி வீரப் போர் புரிக!’ என்று கூறி இன்று போய் நாளை வா’ என்று இனிமையாக எடுத்து மொழிந்தான்.
“ஆளையாவுனக் கமைந்தன மாருதம்; அறைந்த
பூளையாயின கண்டனை இன்றுபோய்ப் போர்க்கு நாளைவாவென நல்கினன் காகிளங் கமுகின் வாளை தாவுறு கோசலை நாடுடை வள்ளல்’
-கம்ப, யுத்த, போர்புரி படலம் : 255
இதனால், முதலில் இராமன் அங்கதனைத் துாது விட்டும் நேரில் அறிவுரை கூறியும் போரினைத் தவிர்க்கவே முற் பட்டான் என்பதும், அஃது இயலாமற்போனபோது போர் புரிய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்பதும் அறிந்து கொள்ளத் தக்கனவாகும்.
இவ்வாறு முடியிழந்து, படைக்கலமிழந்து, இலங்கை நோக்கி மீளும் நிலையினைக் கம்பர் வாக்கே கவினுற விளக்குதல் காண்க. யானையோடு அஞ்சாது மோதும் மார்பினையும், உமை கேள்வன் உறையும் கைலை மலை யினையே எடுக்கும் தோளினையும், நாரத முனிவற் கேற்ப இன்னிசை முழக்கும் இனிய நாவினையும், பத்துத் தலைகளிலும் பாங்குறத் தரித்த முடியினையும், சிவன் தந்த வெற்றி வாளினையும், தன்னிடத்தே இதுகாறும் நிலைத்திருந்த வீரத்தினையும் போர்க்களத்தே போட்டு விட்டு, இராவணன் வெறுங்கையனாய் இலங்கைக்குத் திரும்பிச் சென்றனன். அவ்வாறு திரும்பிச் சென்றவன், எட்டுத் திக்குகளில் எதையும் நோக்கவில்லை; தன்