பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/1142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

power down

1141

power management



power down : விசை நிறுத்தம் : 1. ஒரு கணினியை அல்லது புறநிலைச் சாதனத்தை நிறுத்தி விடுதல். 2. மின்தடங்கல் ஏற்படும்போது அல்லது மின் விசை நிறுத்தப்படும்போது, கணினிக்கு அல்லது அதனுடன் இணைந்துள்ள புறநிலைச் சாதனங்கள் சேதமடைவதைத் தடுப்பதற்காக கணினி மேற் கொள்ளும் நடவடிக்கை.

power fail/restart : மின்தடங்கல்/தொடங்கல் : மின்தடங்களுக்குப் பிறகு ஒரு கணினி தனது இயல்பான செயற்பாட்டினைத் தொடங்குவதற்கு இயல்விக்கும் வசதி.

power failure : மின் நிறுத்தம்;மின்தடங்கல்;மின் துண்டிப்பு : கணினி செயல்பட்டுக் கொண்டிருக்கும்போது மின்சாரம் தடைப்படல். மாற்று மின் வழங்கி இல்லையெனில் கணினியின் நிலையா நினைவகத்தில் (RAM) தேங்கியுள்ள தரவுகள் இழக்கப்பட்டுவிடும்.

powerful : ஆற்றல்வாய்ந்த : வன்பொருள் விரைவாக இயங்குவ னவாகவும், வடிவளவில் பெரிதாகவும், தம்மையொத்த எந்திரங்களை விட அதிகப் பணிகளைச் செய்யக் கூடியனவாக இருப்பின் ஆற்றல் வாய்ந்தவை எனக் கருதப்படும். மென் பொருள் திறமையாகச் செயற் படுவனவாகவும், பெருமளவுப் பணிகளைச் செய்யக்கூடிய வையாகவும் இருந்தால் அவை வாய்ந்தவை எனக்கருதப்படும்.

power macintosh : பவர் மெக்கின்டோஷ் : பவர்பீசி (Power PC) செயலி பொருத்தப்பட்ட ஆப்பிள் மெக்கின்டோஷ் கணினி. பவர் மெக்கின்டோஷ் 6100/60, 7100/66, 8100/80 கணினிகள் முதன்முதலில் 1994 மார்ச்சில் வெளியிடப்பட்டன.

பவர் மெக்கின்டோஷ்

power management : மின் மேலாண்மை.