பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/446

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

dimmed command

445

DIN connector


பணித்தளத்தில் நாம் நிறைவேற்ற விரும்பும் பணிகளை பட்டியலுள்ள தேர்வுகளில் ஒன்றைத் தேர்வுசெய்து இயக்க வேண்டும். சில சூழ் நிலைகளில் சில தேர்வுகள் வெள்ளைப் பின்புலத்தில் கருப்பு எழுத்தில் இல்லாமல் மங்கிய சாம்பல் நிறத்தில் இருக்கும். கருப்புப் பின்புலத்திலுள்ள வெள்ளை எழுத்துகளும் மங்கிய நிலையில் இருக்கும். இவற்றைப் பயனாளர் தேர்வு செய்ய முடியாது. எடுத்துக் காட்டாக, சொல் செயலித் தொகுப்புகளில், உரைப் பகுதி எதையும் தேர்வு செய்யாதபோது Cut Copy என்ற விருப்பத் தேர்வுகள் மங்கிய நிலையில் இருக்கும். அதேபோல, ஏற் கெனவே ஒரு பகுதியை வெட்டியோ (Cut), நகலெடுத்தோ (Copy), இடைச்சேமிப்புப் பலகை (Clip Board) -யில் வைத்திராத போது Paste என்னும் பட்டியல் தேர்வு மங்கலாக இருக்கும்.

dimmed command : மங்கிய ஆணை : ஒரு பட்டியலில் மங்கலாக்கப்பட்டுள்ள ஆணை. தற்போதைக்கு விருப்பத்தேர்வு எதுவுமில்லை என்பதை ஒரு மங்கிய ஆணை கட்டுகிறது. அந்தத் தேர்வினைச் செய்வதற்கு முன்னர் இன்னொரு செயற்பணி வேண்டும் என்பது இதற்குக் காரணமாக இருக்கலாம்.

dimmed icon : மங்கிய உருவம் : மங்கிய கருநிற உருவம். இது, அது குறித்துக்காட்டும் வட்டு, மடிதாள் அல்லது வட்டு ஆவணம் போன்ற பொருள் ஏற்கனவே திறக்கப்பட்டு விட்டது, அல்லது வட்டு இயக்கியிலிருந்து வெளியேற்றப்பட்டு விட்டது என்பதைக் குறிக்கிறது.

DIN connector : டின் இணைப்பான்;டின் இணைப்பி : ஜெர்மன் தேசிய தரக்கட்டுப்பாட்டு நிறுவனம் (Deutsch industries Norm-DIN)

டின் இணைப்பி

வகுத்துள்ள நெறிமுறைகளுக்கு இசைந்து உருவாக்கப்பட்ட பல்லூசி இணைப்பான். கணினியின் பல்வேறு உறுப்புகளை இணைப்பதற்கு

டின் இணைப்பான்கள் பயன் படுத்தப்படுகின்றன.