பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

control cards

116

control strip


கூடியதே. வன்பொருளைப் பொறுத்தவரை கட்டுப்பாட்டு மின் இணைப்புப் பாட்டை (control bus) என்னும் மின்வழி மூலமாக கணினியின் செயல்பாடுகள் கட்டுப்படுத்தப்படுகின்றன. மென்பொருளைப் பொறுத்தவரை தகவல்களைக் கையாளும் நிரல் ஆணைகளைக் குறிக்கின்றன. 2. ஒரு வரைகலைப் பயனாளர் இடைமுகத்தில் (GUI) ஒரு குறிப்பிட்ட செயல்பாட்டை நிறைவேற்றப் பயனர் இயக்குகின்ற, திரையில் தோன்றும் ஒரு சிறு உருப்பொருள். மிகப்பரவலாகப் பயன்படும் இயக்கு விசைகள், கட்டளைப் பொத்தான்கள், தேர்வுப் பெட்டிகள், உருள்பட்டைகள் போன்றவையாகும்.

control cards கட்டுப்பாட்டு அட்டைகள்.

control code கட்டுப்பாட்டுக்குறிமுறை : அச்சிடலில், தகவல் பரிமாற்றத்தில், திரைக்காட்சிகளில் ஒரு சாதனத்தின் நடவடிக்கையைக் கட்டுப்படுத்துவதற்காக ஒரு கணினி நிரலில் பயன்படுத்தப்படும் அச்சிடவியலாக் குறிகள். (எ-டு: புதியவரி, ஒரு வரி நகர்த்தல், தாளை வெளித்தள்ளல், நகர்த்தியை திரும்பச் செய்தல் போன்ற பணிகளுக்கான அச்சுப் பொறிக் கட்டுப்பாட்டு குறிகள்). ஒரு பயன்பாட்டு மென்பொருள், அச்சுப் பொறியைக் கட்டுப்படுத்தும் வழி முறைகளைக் கொண்டிராதபோது ஒரு நிரலரால் அல்லது ஒரு பயனாளரால் கட்டுப்பாட்டுக் குறிகள் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகின்றன. ஒளித்தோற்றத் திரைக் காட்சியில் கட்டுப்பாட்டுக் குறிகள், உரைப்பகுதியை அல்லது காட்டியைக் கையாள்வதற்கென மையச்செயலியால் திரையகத்துக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. மிகப் பரவலாகப் பயன்படுத்தப்படும் ஒளிக்காட்சிக் கட்டுப்பாட்டு குறிகள் அன்சி (ANSI) மற்றும் விடீ-100 (VT100) ஆகும்.

control computer :கட்டுப்பாட்டுக் கணினி,

controls change of :கட்டுப்பாட்டு மாற்றம்.

control collection : இயக்கு விசைகள் தொகுப்பு.

control flow : கட்டுப்பாட்டுப் பாய்வு: ஒரு நிரலில் இயலக் கூடிய செயல் பாட்டு வழிகள் அனைத்தையும் நுணுகிப் பார்ப்பது. பொதுவாக இது ஒரு வரைபட வடிவில் விளக்கப்படும்.

control counter :கட்டுப்பாட்டு எண்ணி.

control elements :கட்டுப்பாட்டு உறுப்புகள்.

control flowchart : கட்டுப்பாட்டு பாய்வு நிரல்படம்.

control loops :கட்டுப்பாட்டு மடக்கிகள்.

control logic: கட்டுப்பாட்டுத் தருக்கம்.

control register, access:அணுகுக் கட்டுப்பாட்டுப் பதிவகம்,

control strip :கட்டுப்பாட்டுப்பட்டை : 1.பதிவு செய்யப்பட்ட தகவல்களை ஏற்கெனவே அறிந்த மதிப்புகளுடன் ஒப்பிட்டு, துல்லியத் தன்மையைப் பாதுகாக்கத் தேவையான திருத்தங்களைத் தீர்மானிக்கப் பயன்படுத்தப்படும் அளவீட்டுக் கருவிகள். 2.கணினிப் பணியின்போது அடிக்கடிப் பயன்படுத்தக்கூடிய நிரல்களை, தகவல்களைக் குறுவழி (shortcuts) வடிவில் எளிதில் கையாளக்கூடிய

அணுகுக்