பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

dibble

Device independent Bitmap stairp தொடரின் தலைப்பெழுத்துக் குறும் பெயர். ஒரு பயன்பாட்டு மென் பொருளில் உருவாக்கிய துண்மி வரைகலைப் படத்தை, அந்தப் பயன்பாட்டில் தோற்றமளிப்பது போலவே இன்னொரு பயன்பாட்டு மென்பொருளிலும் காண்பதற்கு ஏதுவான கோப்பு வடிவமைப்பில் உருவாக்கப்பட்ட படம். 2. கோப்பகத் தகவல் தளம் என்று பொருள்படும் Directory Information Base என்ற தொடரின் தலைப் பெழுத்துக் குறும்பெயர். எக்ஸ்.500 முறைமையில் பயனாளர்கள் மற்றும் வளங்களின் பெயர்களைக் கொண்ட ஒரு கோப்பகம். இந்தக் கோப்பகம், ஒரு கோப்பக வழங்கன் முகவரால் (Directory Server Agent - DSA) பராமரிக்கப்படுகிறது.

dibble : தகவல் குறைவு.

dictionary, automatic : தானியங்கு அகரமுதலி.

differential : வேறுபாட்டளவை மின்னணுவியலில் ஒரு குறிப்பிட்ட வகை மின்சுற்றைக் குறிப்பிடுகிறது. இந்த மின்சுற்று இரண்டு சமிக்கை களுக்கிடையே உள்ள வேறு பாட்டைப் பயன்படுத்திக் கொள்ளும். வருகின்ற ஓர் உள்ளிட்டு சமிக்கையை வேறொரு உள்ளிருப்பு மின் அழுத்தத்துடன் ஒப்பிடாது.

differentiator : வேறுபாட்டலவி: வேறுபாட்டளவைக் கருவி; மாறு பாடளப்பான் : உள்ளிட்டு சமிக்கை என்ன வேகத்தில் மாறிக் கொண் டிருக்கிறது என்பதை அளக்கும் மின்சுற்று. இந்த மின்சுற்றின் வெளிபீட்டு மின் அளவு, உள்ளிட்டு சமிக்கை மாறும் வேக விகிதத்துக்கு நேர்விகிதத்தில் இருக்கும். x என்பது உள்ளிட்டு சமிக்கை, t என்பது நேரம் எனில், இந்த மின்சுற்றின் வெளி யீட்டளவு dxidt ஆகும்.

digest : சுருக்கத் தொகுப்பு : 1. இணையத்திலுள்ள செய்திக் குழுவில், இடையீட்டாளரிடம் சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரைகளின் சுருக்கங்களைக் கொண்ட தொகுப்பு. 2. ஒரு அஞ்சல் பட்டியலிலுள்ள வாடிக்கையாளர்களுக்கு அனுப்பப்படும் தனித்தனிக் கட்டுரைகளுக்குப் பதிலாக அவற்றின் சுருக்கங்களைத் தொகுத்து அனுப்பி வைக்கப்படும் ஒரு செய்தி. அஞ்சல் பட்டியலுக்கு ஒர் இடையீட்டாளர் இருப்பின் அச்சுருக்கத் தொகுப்பு திருத்திச் சீரமைக்கப்படலாம்.

digit, binary coded : இருமக் குறிமுறை இலக்கம்.

digit, check : சரிபார்ப்பு இலக்கம்.

digit, octal: எண்ம இலக்கம்: எட்டியல் இலக்கம்.

digit place : இலக்க இடம்.

digit punching place : இலக்க துளையிடுமிடம்.

digit, sign : அடையாள இலக்கம்: குறியீட்டு இலக்கம்.

digital audio/video connector : இலக்கமுறை கேட்பொலி/ஒளிக் காட்சி இணைப்பி : சில உயர்திறன் ஒளிக்காட்சி அட்டைகளிலும் (தொலைக்காட்சி டிவி) தடத்தேர்வு அட்டைகளிலும் இருக்கும் இடைமுகம். இதன் மூலம் இலக்கமுறை கேட்பொலி மற்றும் ஒளிக்காட்சி சமிக்கைகளை ஒரே நேரத்தில் அனுப்ப முடியும். டிஏவி இணைப்பி எனச் சுருக்கமாவும் அழைப்பர்.