பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

DPMI

156

drawing programme


காடு.எதிர்பாராதவிதமாக வன்பொருள் பழுதுபட்டுச் செயல்படாமல் இருந்த நேரமாக இருக்கலாம்.அல்லது திட்டமிட்டுப் பராமரிப்புக்காக செயல்படாமல் நிறுத்தி வைத்த நேரமாகவும் இருக்கலாம்.

DPM:டி.பீ.எம்ஐ:பாதுகாக்கப்பட்ட டாஸ் செயல்பாட்டு இடைமுகம் என்று பொருள்படும் Dos Protected Mode Interface என்ற சொல்தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர்.மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் 3.0 பதிப்புக்காக உருவாக்கிய மென்பொருள் இடைமுகம்.80286 மற்றும் அதனினும் கூடுதல் திறன் நுண் செயலிகளில் எம்எஸ்-டாஸ் அடிப் படையிலான பயன்பாட்டு நிரல்கள் பாதுகாக்கப்பட்ட முறையில் செயல் பட உதவும் மென்பொருளாகும் இது.பாதுகாக்கப்பட்ட செயல்முறையில் நுண்செயலி பல்பணிகளை ஒரே நேரத்தில் நிறைவேற்றும்.சாதாரணமாக எம்எஸ் டாஸில் செயல்படும் நிரல்களுக்கு 1 எம்பி நினைவகம் மட்டுமே கிடைக்கும்.ஆனால் பாதுகாக்கப்பட்ட செய்முறையின் போது 1எம்பிக்குக் கூடுதலான நினைவகப் பரப்பையும் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

DPMS:டி.பீ.எம்எஸ்:திரைக்காட்சி மின்சார மேலாண்மை சமிக்கை முறை என்று பொருள்படும் Display Power Management Signalling என்ற சொல்தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர்.கணினி செயல்படாத போது காட்சித்திரை ஒய்வு அல்லது இடைநிறுத்த நிலையில் இருக்கும்.அப்போது மிகக்குறைந்த மின் சாரத்தையே எடுத்துக்கொள்ளும்.வேஸா(VESA) நிறுவனத்தின் தர வரையறையாகும் இது.

draft:வரைவு நகல்.

draft mode:நகல் பாங்கு:பெரும்பாலன புள்ளியணி அச்சுப்பொறிகளில் இருக்கின்ற குறைந்த தரமுடைய அதிவேக அச்சுக்கான அச்சுமுறை.

drag and drop:இழுத்து விடுதல்; இழுத்துப் போடுதல்:வரைகலைப் பணித்தளத்தில் மேற்கொள்ளப்படும் ஒரு செயல்பாடு.திரையில் தோன்றும் ஒரு பொருளை சுட்டியின் மூலம் இழுத்துச் சென்று வேறிடத்தில் இருத்திவைத்தல்.(எ-டு)விண்டோஸ் இயக்க முறைமையில் ஒரு கோப்பினை அழிக்க வேண்டுமெனில்,கோப்புக்கான சின்னத்தை இழுத்துச் சென்று Recycle Bin எனப்படும் மீட்சிப் பெட்டியில் போட்டுவிடலாம். மெக்கின்டோஷில் கோப்புச் சின்னத்தை Trashcan எனப்படும் ஒழிவுப் பெட்டியில் போட்டு விடலாம்.

DRAW:டிரா:எழுதியபின் நேரடி வாசிப்பு என்று பொருள்படும் Direct Read After Write என்ற சொல் தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர்.ஒர் ஒளிவட்டில் எழுதப்பட்ட தகவலின் துல்லியத்தைச் சோதித்தறிய,வட்டில் எழுதப்பட்டவுடனே,சரியாக உள்ளதா என்பதைப் பரிசோதிப்பர்.இதற்கான தொழில் நுட்பமே டிரா ஆகும்.

drawing programme:ஓவிய நிரல்:பொருள் அடிப்படையிலான வரை கலைப் படங்களைக் கையாள்வதற்கான ஒரு நிரல்.படப்புள்ளிகளால் (pixels)வரையும் படங்களைக் கையாள்வதிலிருந்து மாறுபட்டது. எடுத்துக்காட்டாக,ஒவிய நிரலில்,பயனாளர் கோடு,சதுரம்,செவ்