பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

extension manager

180

ezine


ஈடான நிறக்காட்சியைத் தரும் இலக்க முறைச் செந்தரம் எனக் கருதப்படுகிறது.


extension manager : நீட்டிப்பு மேலாளர் : மெக்கின்டோஷ் கணினியிலுள்ள ஒரு பயன்பாட்டு நிரல். கணினியை இயக்கும்போது எந்தெந்த நீட்டிப்புகளை நினைவகத்தில் மேலேற்றிக் கொள்ள வேண்டும் என்பதை வரையறுக்க பயனாளருக்கு உதவுகிறது.


external gateway protocol : புற நுழைவி நெறிமுறை : பிணையங்களை இணைக்கும் திசைவிகளுக்கும் நுழைவிகளும் (Routers and Gateways) இருப்புநிலைத் தகவலைக் கொண்டு சேர்க்கும் நெறிமுறை.


external modem : புற இணக்கி : கணினியின் நேரியல் துறையில் வடம் மூலமாக இணைக்கப்படும் தனித்த இனக்கி.


external viewer : புறப் பார்வைநிரல்; புறக் காட்சிநிரல் : தற்போது பயன் படுத்திக் கொண்டிருக்கும் பயன் பாட்டுத் தொகுப்பினால் கையாள முடியாத வகையைச் சேர்ந்த ஒர் ஆவணத்தைப் பார்வையிடப் பயன் படும் ஒரு பார்வைநிரல்.


extra-high-density floppy disk : கூடுதல் மிகு அடர்வு நெகிழ்வட்டு : 4 எம்பி தகவல் சேமிக்க வல்ல 3.5 அங்குல நெகிழ்வட்டு. இதனை இயக்க இரண்டு முனைகள் கொண்ட தனிச் சிறப்பான இயக்ககம் (Drive) தேவை.


extrapolation : புற இடுகை.


extranet : புறப்பிணையம் : ஒரு நிறுவனம் இணையத் தொழில்நுட்ப அடிப்படையில் (குறிப்பாக வைய விரிவலைத் தொழில்நுட்பங்கள்) தமது நிறுவனப் பிணையத்தை அமைத்திருப்பின் அதனை அக இணையம் (Intranet) என்றழைக்கிறோம். அந்த நிறுவனத்துக்கு பொருள் வழங்குவோர், வாடிக் கையாளர் இவர்களும் வரம்புக்குட் பட்ட வகையில் நிறுவனப் பிணையத்தை அணுக அனுமதித்தால் அதனை புறப்பிணையம் எனலாம். இவ்வாறு அனுமதிப்பதால் வணிக நடவடிக்கைகள் விரைவுபடு கின்றன. உறவுகள் பலப்படுகின்றன.


extrinsic semiconductor : புறத் தூண்டல் குறைகடத்தி : (P-)-வகை அல்லது (N-)-வகை மாசு சேர்ப்பதன் மூலம் வெப்பப் படுத்துதல் போன்ற சூழ்நிலைமைகளில் மின்னணுக்களைப் பயணிக்க வைத்து மின் சாரத்தைக் கடத்துகின்ற ஒருவகைக் குறைகடத்தி. மின்னணுக்களை அவற்றின் இயல்பான நிலை யிலிருந்து வலிந்து நகரச் செய்து புதிய மின்னணுக் கற்றை அல்லது மின்னணு இடைவெளிகளை உரு வாக்குகின்றன.


ezine : மின்னிதழ் : மின்னணு இதழ் என்பதன் சுருக்கம். இணையம், அறிக்கைப் பலகைச் சேவை (BBS) மற்றும் இதர நிகழ்நிலைச் சேவை மூலம் பெரும்பாலும் இலவசமாக வழங்கப்படும் நாளிகை இதழ்.