பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

fetch cycle 185 file locking

பெறக்கூடிய பொருள். மின்னணுத் துறையில் பரவலாகப் பயன்படுத் தக்கூடிய பொருள். எஃகு மற்றும் தூளாக்கப்பட்ட இரும்பு ஆகியவை. மின்துண்டி (Inductor)களின், துண்டல் திறனை அதிகரிக்க, அவற்றின் சுருள்மையமாய்ப் பயன்படுகிறது. நெகிழ்வட்டு, நிலைவட்டு மட்டும் காந்த நாடாக்களில் மேல்பூச்சுக்குப் பயன்படுகிறது.

fetch cycle: கணவர் சுற்று.

fetch instruction : கணவர் ஆணை.

fi : எஃப்ஐ இணையத்தில் ஃபின் லாந்து நாட்டைச் சேர்ந்த இணைய தளம் என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

field - based search : புலம் சார் தேடல், field card : அட்டை புலம்.

field delimitter : புலம் வரம்புக்குறி.

field list : புலப் பட்டியல்.

field menu : புலப்பட்டி.

field programmable logic array : புல நிரலாக்க தருக்கக் கோவை : ஒரு வகையான ஒருங்கிணை மின்சுற்று (IC). இதில் தருக்க மின்சுற்றுகளின் (logic circuits) கோவை இருக்கும் . தனித்த மின்சுற்றுகளிடையே இணைப்புகளையும், அதன்மூலமாக கோவையின் தருக்கச் செயல்முறை களையும் நம் விருப்பப்படி நிரலாக்கம் செய்ய முடியும், தயாரிப் புக்குப் பிறகு, குறிப்பாக அவற்றைக் கணினிகளில் நிறுவும் நேரத்தில் நிரலாக்கம் செய்யலாம். இத்தகைய நிரலாக்கத்தை ஒரேயொரு முறை மட்டும் செய்ய முடியும். சிப்புவின் இணைப்புகளிடையே மிக அதிக மின்சாரத்தை செலுத்தி இத்தகைய நிரலாக்கத்தைச் செய்வர்.

field/record : புலம்/ ஏடு. field size : புலம் அளவு field, updatable : மாற்றத் தகடு புலம். field, variable : மாறு புலம். figure : உரு.

file attachment : கோப்பு உடன் இணைப்பு.


file, archived : காப்பக கோப்பு. file codes : கோப்புக் குறிமுறைகள். file compression : கோப்பு சுருக்கம்; கோப்பு அழுத்தம்; கோப்பு இறுக்கம்: ஒரு கோப்பினை வேறிடத்துக்கு அனுப்பி வைக்க அல்லது சேமிக்க அதன்அளவைச்சுருக்கும் செயல்முறை. file

conversion utility : கோப்பு மாற்றல் பயன்பாடு,

file deletion : கோப்பு நீக்கம்.

file, destination : சேகரிக்க கோப்பு.

file control block : கோப்பு கட்டுபாட்டுத் தொகுதி : ஒரு கணினியின் இயக்க முறைமை, திறந்து வைக்கப் பட்ட ஒரு கோப்பு பற்றிய விவரங் களைப் பதிவுசெய்து வைத்துக் கொள்வதற்கு தற்காலிகமாக ஒதுக்கப்படும் நினைவகப் பகுதி.

file dump : கோப்பு தினிப்பு

file, end of : கோப்பு முடிவு.

file extent : பாவு கோப்பு.

file extension: கோப்பு வகை பெயர்.

file handling : கோப்பு கையாளல்.

file identification கோப்பு அடையாளம் காணல். file, index sequential : சுட்டு தொடரியல் கோப்பு. file locking : கோப்புப் பூட்டல்.