பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

academic network

19

access control list


சாரத்தை, கணினி உறுப்புகளுக்குத் தேவைப்படுகின்ற குறைந்த மின்னழுத்தம் கொண்ட நேர் மின்சாரமாக மாற்றித்தரும் ஒரு புறச்சாதனம்.

academic network : கல்வித்துறைப் பிணையம்.

accelerated graphics port (AGP) : முடுக்கு வரைகலைத் துறை.

acceleration time : முடுகு நேரம். முடுக்கல் நேரம்.

accelerator board : முடுக்குப் பலகை; வேகமூட்டிப் பலகை.

accelerator card : முடுக்கி அட்டை : கணினியின் மைய நுண்செயலிக்குப் பதிலாக அல்லது அதன் வேகத்தை அதிகரிக்க பயன்படுத்தப்படும் அச்சு மின்சுற்றுப் பலகை (printed circuit board). இதனால் கணினியின் வேகத்திறன் அதிகரிக்கும்.

accelerator key : முடுக்கு விசை.

accept : ஏற்றுக்கொள்.

acceptable user policy : ஏற்கத்தக்க பயனாளர் கோட்பாடு : ஏற்கத்தக்க பயன்பாட்டுக் கொள்கை : இணையச் சேவையாளர் அல்லது இணையத்தில் தகவல் சேவை வழங்குபவர் வெளியிடும் ஒர் அறிக்கை. இணையச் சேவையைப் பயன்படுத்திக் கொள்ளும் பயனாளர் எந்தெந்த நடவடிக்கையில் ஈடுபடலாம் அல்லது ஈடுபடக்கூடாது என்று குறிப்பிட்டுக் காட்டும் அறிக்கை. எடுத்துக்காட்டாக, பயனாளர்கள் வணிக நடவடிக்கைகளில் ஈடுபடுவதைச் சில இணையச் சேவையாளர்கள் அனுமதிப்பதில்லை.

access bus : அணுகு பாட்டை : அணுகு மின்வழி : கணினியுடன் புறச்சாதனங்களை இணைக்கப் பயன்படும் இருதிசை மின் இணைப்புத் தொகுதி. அச்சுப் பொறிகள், இணக்கிகள், சுட்டிகள், விசைப் பலகைகள் போன்ற 125 குறைவேகப் புறச் சாதனங்களை ஒற்றைப் பொதுப் பயன் வாயில் மூலமாக, இந்த அணுகுபாட்டையில் கணினியுடன் இணைக்க முடியும். இதற்கு இயைபுடைய புறச் சாதனங்கள், தொலைபேசி செருகி போன்ற இணைப்பானால் பொருத்தப்படுகின்றன. ஆனால் கணினி ஒவ்வொரு புறச் சாதனத்துடனும் நேரடியாக தொடர்பு கொள்கிறது. கணினி செயல்பட்டுக் கொண்டிருக்கும் போதே புறச்சாதனத்தைப் பொருத்தலாம். கணினி, தானாகவே அதற் கொரு முகவரியை ஒதுக்கி செயல் நிலைக்கு கொண்டுவந்துவிடும். டிஜிட்டல் எக்யூப்மென்ட் கார்ப்பரேஷன் உருவாக்கியுள்ள இந்த அக்செஸ் பஸ், இன்டெல் நிறுவனத்தின் யுஎன்பி (universal serial bus)-க்குப் இணையானது எனலாம்.

access control list : அணுகல் கட்டுப்பாட்டுப் பட்டியல் : வட்டில்