பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

graph chart

209

Gregorian calendar


கடைப்பிடிக்கப்படுகின்றன.ஒரு தனிப்பட்ட சாதனத்துக்கென இல்லாமல்,விசைப்பலகை, சுட்டி,காட்சித் திரை இவையிணைந்த பணிநிலையங்களுக்கானவை.1978ஆம் ஆண்டு இருபரிமாண வரைகலைக்காகவே இம்முறைமை உருவாக்கப்பட்டது.பின்னாளில் ஜிகேஎஸ்-3டி (GKS-30) என்ற பெயரில் முப்பரிமாண வரைகலைக்கும் விரிவாக்கப்பட்டது.

graph chart:வரைவு நிரல்படம்.

graphics:வரைகலை.

graphic field:வரைகலைப் புலம்.

graphic object:வரைகலைப்பொருள்.

Graphics Controller:வரைகலைக் கட்டுப்படுத்தி:திரைக்காட்சிக்கான தேக்கு நினைவகத்தைக் கணினி அணுகுவதற்கு அனுமதிக்கின்ற இ.ஜி.ஏ,விஜிஏ ஒளிக்காட்சித்தகவியின் ஒரு பகுதி.

graphics coprocessor:வரைகலைத் துணைச்செயலி:சில ஒளிக்காட்சி தகவிகளில் இணைக்கப்பட்டிருக்கும் தனிச்சிறப்பான நுண்செயலி.மையச் செயலகத்தின் பிற பணிக்கான ஆணைகளுக்கு ஏற்ப,கோடுகள் நிரப்பிய பரப்புகளால் ஆன வரைகலை உருவங்களை இச்செயலி உருவாக்கும்.

graphics data structure:வரைகலைத் தரவுக் கட்டமைவு:ஒரு வரைகலைப் படிமத்தின் ஒன்று அல்லது மேற்பட்ட கூறுகளைச் சுட்டுவதற்கென்றே தனிச்சிறப்பாய் வடிவமைக்கப்பட்ட ஒரு தரவுக் கட்டமைவு.

graphical design:வரைகலை வடிவமைப்பு.

graphical divice interface:வரைகலைச்சாதன இடைமுகம்.

graphical Terminal:வரைகலை முனையம்.

graphics,computer:கணினி வரைவியல்; கணினி வரைகலை.

graphics spread sheet:வரைகலை விரிதாள்.

graphics view:வரைகலை காட்சி.

greatful degradation:படீப்படியாகத் தரங்குறைதல்;படிப்படியாக தரமிழத்தல்.

graphics & sound:வரைகலை மற்றும் ஒலி.

grass pay:மொத்த ஊதியம்.

gray scale monitor:சாம்பல் அளவீட்டுத் திரையகம்.

gray scale scanner:சாம்பல் அளவீட்டு வருடுபொறி.

great renaming:மிகப்பெரும் பெயர்மாற்றம்: இணையத்தில் இப்போது நடைமுறையில் இருக்கும் செய்திக்குழுக்களின் பெயரமைப்புக்கு மாறிய நிகழ்ச்சியைக் குறிக்கிறது.முன்பெல்லாம், இணையம் சார்ந்த புறச் செய்திக்குழுவின் பெயர்கள் net,என்றெல்லாம் இருந்தன. எடுத்துக்காட்டாக நிரல்களின் மூல வரைவுகளைக் கொண்டுள்ள செய்திக்குழு net.sources என்று பெயர் பெற்றிருந்தன.1985ஆம் ஆண்டு மிகப்பெரும் பெயர்மாற்றம் அறிமுகப்படுத்தப்பட்டது.அதன்படி net.sources என்ற பெயர் comp.sources.misc என்று மாற்றம் பெற்றது.இதுபோல,செய்திக்குழுவின் அனைத்துப் பெயர்களும் புதிய பெயரமைப்புக்கு மாற்றப்பட்டன.

Green Pc:பசுமைக் கணினி.

Gregorian calendar:கிரிகோரியன் நாட்காட்டி: மேலை நாடுகளில்


14