பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

local network

271

logical device


அட்டவணைகளை/பட்டியல்களை வரிசை முறைப்படுத்தும் நிரலை அந்தந்த மொழிகளுக்கு ஏற்ப அமைக்க வேண்டும்.ஒரு மொழியில் ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமையும் எழுத்துக் குறிமுறை பிற மொழியில் வேறு வரிசையில் அமையலாம்.

local network:வட்டாரப் பிணையம்.

local newsgroups:வட்டாரச் செய்திக்குழுக்கள்: ஒரு நகரம்,ஒரு பல்கலைக்கழகம் என வரம்புக்குட்பட்ட நிலப்பரப்பில் இயங்கும் செய்திக்குழுக்கள். இச்செய்திக் குழுவில் அஞ்சல் செய்யப்படும் கட்டுரைகள் அந்த வட்டாரம் குறித்த தகவலையே கொண்டிருக்கும்.

local reboot:உள்ளமை மீட்டியக்கம்: ஒரு பிணையத்தில் இணைக்கப்பட்ட ஒரு கணினியை அதனுள்ளேயே மீட்டியக்குவது.(தொலைப் புரவனிலிருந்தும் மீட்டியக்க முடியும்).

local usenet hierarchy:உள்ளமை யூஸ்நெட் படிநிலை:

local variable:வரம்புறு மாறிகள்;உள்ளமை மாறிகள்:ஒரு நிரலில் ஒரு செயல்கூறு செயல்முறை அல்லது துணைநிரல்கூறு போன்ற ஒரு குறிமுறைத் தொகுதிக்குள் பயன்படுத்தக்கூடிய மாறிகள்.

location,bit:துண்மி அமைவிடம்;பிட் இருப்பிடம்.

locked file:பூட்டிய கோப்பு:1.கையாள முடியாமல் பூட்டி வைக்கப்படும் ஒரு கோப்பு. குறிப்பாக,தகவலை மாற்றியமைத்தல்,புதிய தகவலைச் சேர்த்தல்,இருக்கும் தகவலை நீக்குதல் போன்ற செயல்பாடுகளுக்கு இடம் கொடாமல் பூட்டி வைக்கப்படும் கோப்பு.2.அழிக்க முடியாத, வேறிடத்துக்கு மாற்ற முடியாத அல்லது பெயர்மாற்ற முடியாத ஒரு கோப்பு.

locked volume:பூட்டிய தொகுதி:ஆப்பிள் மெக்கின்டோஷ் கணினிகளில் சேமிப்பகங்களில் எழுத முடியாமல் தடுக்கப்படும் தொகுதி.ஒரு வன்பொருள் கருவி மூலமோ அல்லது ஒரு மென்பொருள் மூலமோ இவ்வாறு பூட்டிவைக்க முடியும்.

logical:தருக்கமுறை: 1.எண்வகை மதிப்புகளைக் கொண்டு கணக்கீடு செய்வதுபோல் அல்லாமல் சரி/தவறு என்று இரண்டிலொரு முடிவை எடுக்கும் முறை.(எ-டு)ஒரு தருக்கத் தொடர் (logical expression) என்பது,அதன் இறுதி விடை சரி அல்லது தவறு என்கிற ஒற்றை விடையாக இருக்கும்.2.கருத்துருவாக நிலவும் ஒரு கொள்கை அல்லது கோட்பாடு.அதை உண்மையில் எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்பது முக்கியமில்லை.

logical errors:தருக்கப் பிழைகள்.

logical device:தருக்க சாதனம்:ஒரு கணினி அமைப்பில் ஒரு சாதனத்தின் பருவுரு வகையிலான உறவுமுறை எப்படி இருப்பினும் மென்பொருள் முறைமையின் தருக்க அடிப்படையில் பெயர் குறிக்கப்பட்ட ஒரு சாதனம். (எ-டு)எம்எஸ் டாஸ் இயக்கமுறைமையில் ஒற்றை நெகிழ்வட்டு இயக்ககம் ஏ என்றழைக்கப்படும். அதனையே பி என்றும் பெயரிடலாம்.கணினியில் இரு நெகிழ்வட்டகம் இல்லாத போதும் DISKCOPY A: B:என்ற