பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/277

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

lurk

275

LZW compression


lurk:ஒளிவு:பதுக்கம்:ஒரு செய்திக் குழுவில் அல்லது நிகழ்நிலைக் கலந்துரையாடல்களில் தாம் எதுவும் அனுப்பாமல் கட்டுரைகளையும் செய்திகளையும் பெற்றுக் கொண்டிருத்தல்.

.lw எல்வி:ஓர் இணையதள முகவரி லாத்துவியா நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

.ly:.எல்ஒய்:ஓர் இணையதள முகவரி, லிபியா நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

lynx:லின்ஸ்க்: யூனிக்ஸ் பணித்தளத்தில் செயல்படும் ஒரு வலை உலாவி. உரைப்பகுதிகளை மட்டுமே பார்வையிட முடியும்.

.lzh:எல்இஸ்ட்ஹெச்; லெம்பெல் ஸிவ் மற்றும் ஹகுயாசு படிமுறைத் தருக்கப்படி இறுக்கிச் சுருக்கப்பட்ட காப்பகக் கோப்புகளின் கோப்பு வகைப்பெயர்(File Extension).

LZW compression:எல்இஸ்ட் டபிள்யூ இறுக்கம்:கோப்புகளை இறுக்கிச் சுருக்குவதற்கான ஒரு படிமுறைத் தருக்கம் (algorithm).மீண்டும் மீண்டும் இடம்பெறும் ஒரே மாதிரியான சரங்கள் (strings) சில குறிப்பிட்ட குறியீடுகளால் மதிப்பீடு செய்யப்படுகின்றன. ஜிஆர்எஃப் இறுக்கு முறைக்கும் இதுவே அடிப்படை ஆகும்.