பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/303

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

.my

301

.mz


.my : .எம்ஒய் : ஓர் இணைய தள முகவரி மலேசியா நாட்டைச்சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

My Computer : என் கணினி. விண்டோஸ் 95/98 இயக்கமுறைமையில் முகப்புத் திரையில் இருக்கும் ஒரு கோப்புறை.

My Documents : என் ஆவணங்கள். விண்டோஸ் 95/98 இயக்கமுறைமையில் முன்னியல்பாய் இருக்கும் ஒரு கோப்புறை.

MYOB : .எம்யோப் : உன் வேலையைப் பார் எனப்பொருள்படும் Mind Your Own Business என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். மின்னஞ்சல் மற்றும் செய்திக்குழுக்களில் பயன்படுத்தப்படுவது.

my two cents : என் பங்களிப்பு: மை டூ சென்ட்ஸ் : செய்திக் குழுக் கட்டுரைகளிலும் அவ்வப்போது மின்னஞ்சல் செய்திகளிலும் அஞ்சல் பட்டியலிலும் பயன்படுத்தப்படும் ஒரு தொடர். குறிப்பிட்ட செய்தி, நடந்து கொண்டிருக்கும் விவாதத்தில் எழுத்தாளரின் பங்களிப்பு என்பதைக் குறிப்பிடுவது.

.mz : எம்இஸட் : ஓர் இணைய தள முகவரி மொஸாம்பிக் நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.