பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/318

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

normal view button

316

NSFnet


|

normal view button :இயல்பான காட்சிப் பொத்தான்.

normalise : இயல்பாக்கு.

Norton anitvirus: நார்ட்டன் ஆன்டி வைரஸ். நச்சுநிரல் எதிர்ப்பு மென் பொருள்.

notation base : தளக் குறிமானம்.

notation, binary coded decimal :இருமக் குறியீட்டுப் பதின்மக் குறி மானம்.

notation, octal :எண்மக் குறிமானம்.

notation, radix:அடிஎண் குறிமானம்.

note book computer : கையேட்டுக் கணினி.

notelead : குறிதாள் அட்டை

Notepad : நோட்பேடு : ஒர் உரைத் தொகுப்பான் மென்பொருள். விண் டோஸ் 95/98-இல் உள்ளது.

Novel NetWare :நாவெல் நெட்வேர்: நாவெல் நிறுவனம் தயாரிக்கும் குறு பரப்புப் பிணைய இயக்க முறைமையின் மென்பொருள் தொகுதிகள். ஐபி எம்பீசி மற்றும் ஆப்பிள் மெக்கின் டோஷ் கணினிகளில் செயல்படக் கூடியவை. பிணையப் பயனாளர்கள் கோப்புகளையும், நிலைவட்டுகள் மற்றும் அச்சுப்பொறிகள் போன்ற முறைமை வளங்களையும் பகிர்ந்து கொள்ள நாவெல் நெட்வேர் அனுமதிக்கிறது.

.np : என்பீ : ஒர் இணைய தள முகவரி நேபாள நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப் பிரிவுக் களப்பெயர்.

NPN transistor : என்பீஎன் மின்மப்பெருக்கி : மின்மப் பெருக்கிகளில் ஒருவகை. N-வகைப் பொருளால் ஆன உமிழிக்கும் திரட்டிக்கும் இடையில் பின்னப்பட்ட P-வகை பொருளால் ஆன அடிவாய் (Base) கொண்டது. அடிவாய், உமிழி, திரட்டி ஆகிய மூன்று முனையங் களின் வழியே மின்னோட்டம் பாய் கிறது. N-P.N மின்மப் பெருக்கிகளில் மின்னணுக்கள்தாம் மின்னூட்டச் சுமப்பிகளாய்ச் செயல்படுகின்றன. அவை உமிழியிலிருந்து திரட்டியை நோக்கிப் பாய்கின்றன.

.nr . .என்.ஆர் : ஒர் இணைய தள முகவரி நெளரு நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

NSAP : என்எஸ்ஏபிஐ : நெட்ஸ்கேப் வழங்கன் பயன்பாட்டு நிரலாக்க இடைமுகம் எனப் பொருள்படும் Netscape Server Application Programming Interface என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும் பெயர். நெட்ஸ்கேப் ஹெச்டீடீபி வழங்கனுக்கும் ஏனைய பயன் பாட்டு நிரல்களுக்கும் இடையே யான இடைமுகத்துக்கான வரன் முறைகளை இது குறிக்கிறது. ஒரு வலை உலாவியிலிருந்து வலை வழங்கன் மூலமாகப் பயன்பாட்டு நிரல்களை அணுகுவதற்கு இதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

.ns.ca : .என்.எஸ்.சி.ஏ : ஒர் இணைய தள முகவரி கனடா நாட்டின் நோவா ஸ்காட்டியா மாநிலத்தைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

NSFnet என்எஸ்எஃப்நெட் :அமெரிக்க நாட்டின் தேசிய அறிவியல் கழகம்(National Science Foundation) உருவாக்கிய விரிபரப்புப் பிணையம். ஆர்ப்பாநெட்டுக்குப்