பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/322

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

object resource

320

office application


சிக்கலான தரவினங்களை பொருள் நோக்கு முறையில் மேலாண்மை செய்வதற்கு உகந்தது.

object resource : பொருள் வளம்.

object type : பொருள் வகை.

object type inheritance : பொருள்வகை மரபுரிமம்.

object wrapper: : பொருள் மேலுறை: பொருள்நோக்கு மென்பொருள் பயன்பாடுகளில் பேசப்படுவது.

oblique : சாய்வு : ஒரு கணினியில் அல்லது அச்சுப் பொறியில் உண்மையான சாய்வு எழுத்துரு (Italic Font) இல்லாதபோது, ஒரு ரோமன் எழுத்துருவைச் சற்றே சாய்த்து சாய்வு எழுத்துருபோல ஆக்கிக் கொள்கின்ற முறையை இவ்வாறு கூறுவர்.

OC3 : ஓசி3 : ஒளிவச் சுமப்பி3 என்று பொருள்படும் Optical Carrier 3 என்பதன் சுருக்கம். சோனட் (SONET) எனப்படும் அதிவேக ஒளியிழை தகவல் பரப்பு அமைப்புகளில் பயன் படுத்தப்படும் ஒளிச்சமிக்கை மின் சுற்றுகள் பலவற்றில் இதுவும் ஒன்று. ஒசி3 வினாடிக்கு 155.52 மெகா பிட் சமிக்கைகளைச் சுமந்து செல்கிறது. சோனட் மற்றும் ஐரோப்பிய முறையான எஸ்டிஹெச் இரண்டும் ஒருங்கிணைந்து செயல்பட இந்த வேகம் குறைந்தபட்ச வேகமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

octal, binary coded : இருமக் குறி முறை எண்மம்.

octal digit : எண்ம இலக்கம்.

octal notation : எண்மக் குறிமானம்.

octal number : எண்ம எண்.

OCX : ஓசிஎக்ஸ் : ஒஎல்இ கஸ்டம் கன்ட்ரோல் என்பதன் சுருக்கம். ஒஎல்இ மற்றும் காம் தொழில்நுட்பம் இரண்டும் இணைந்த மென்பொருள் கூறு. ஒரு மென்பொருள் பயன்பாடு அழைக்கும்போது, அந்தப்பயன்பாட்டுக்கு விரும்பு கின்ற சில பண்புக் கூறுகளை அளிக்கும் ஒரு கட்டுப்பாட்டினை இது உருவாக்கித் தருகிறது. ஒசிஎக்ஸ் தொழில்நுட்பம் வேறுபட்ட பணித் தளங்களில் செயல்பட வல்லது. 16-பிட், 32 பிட் இயக்க முறைமைகளிலும், பல்வேறுபட்ட பயன்பாடுகளிலும் பயன்படுத்தவல்லது. விசுவல் பேசிக் பயன்பாடுகளுக்கு மட்டுமே பயன்படுத்த முடிந்த விபிஎக்ஸ் (Visual Basic Custom Control) தொழில்நுட்பத்தின் வாரிசாக வந்தது. ஆக்டிவ்எக்ஸ் தொழில் நுட்பத்தின் அடிப்படையாக விளங்குவது. ஒசிஎக்ஸ்-கள் விசுவல் சி++ மொழியில் எழுதப்பட்டாலும் வேறு பல மொழிகளிலும் எழுத முடியும். 1996 ஒஎல்இ கன்ட்ரோல் வரன்முறையில் இடம்பெற்றுள்ள ஓசிஎக்ஸ் தொழில்நுட்பத்தை மைக்ரோ சாஃப்ட் நிறுவனம் வடிவமைத்துள்ளது.

ODBC : ஓடிபிசி : திறந்த தரவுத்தள இணைப்புநிலை என்று பொருள்படும் Open Database Connectivity என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். பிணையத்திலுள்ள ஒரு தரவுத் தளத்தை விண்டோஸ் பயன்பாடுகள் அணுகுவதற்கு ஒரு பொதுவான வழிமுறையை வழங்கும் இடைமுகம் ஆகும். மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தினர் உருவாக்கியது.

ODBC Data sources : ஒடிபிசி தரவு மூலங்கள்.

office application : அலுவலகப்பயன்பாடுகள்.