பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/395

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

roman

393

root account

பயிற்சியாளர்கள் நடித்துக் காட்ட வேண்டும். மேலாண்மைப் பதவிகளை வகிக்கப் போகிறவர்கள் நடப்பு வாழ்வில் சந்திக்கவிருக்கும் சவால்களை எதிர் கொள்வதற்கு இத்தகைய பயிற்சிகள் உதவுகின்றன.

roman : ரோமன் : ஒருவகை எழுத்து வடிவம். சாய்ந்த வடிவமாக இல்லாமல் நிமிர்ந்து நிற்கும் வடிவம் கொண்ட எழுத்துரு.

ROM Basic : ரோம் பேசிக் ;ரோம்(ROM-Read Only Memory) நினைவகத்தில் பதிந்துவைக்கப்பட்ட பேசிக் மொழி ஆணைமாற்றி(Interpreter)யைக் குறிக்கும். கணியை இயக்கிய வுடன் பேசிக் மொழி நிரலை எழுதி இயக்கலாம். வட்டு அல்லது நாடாவிலிருந்து பேசிக் மென்பொருளை நினைவகத்தில் ஏற்ற வேண்டியதில்லை. தொலைக்காட்சிப் பெட்டியுடன் இணைத்து இயக்கக்கூடிய தொடக்ககால வீட்டுக் கணினி (Home Computer)களில் ரோம் பேசிக் இணைக்கப்பட்டிருந்தது.

ROM card :ரோம் அட்டை : அச்சுப்பொறிக்கான சில எழுத்துருக்கள் அல்லது சில நிரல்கள் அல்லது சில விளையாட்டுகள் அல்லது பிற தகவல்கள் பதியப்பட்ட ரோம் (ROM) நினைவகச் சிப்புகள் பொருத்தப்பட்ட ஒரு செருகு அட்டை, ரோம் அட்டை, ஒரு பற்று அட்டை (Credit card)யின் அளவில் ஆனால் அதை விடப் பலமடங்கு தடிமனாக இருக்கும். ஒருங்கிணைப்பு மின்சுற்று அட்டைகளில் நேரடியாகத் தகவல்கள் சேமிக்கப்பட்டிருக்கும்.

ROM cartridge : ரோம் பொதியுரை : ரோம் அட்டை (ROM card) ஒரு பிளாஸ்டிக் பொதியுறையில் இடப்பட்டு, இணைப்பு முனைகள் ஒரு விளிம்பில் வெளித்தெரிந்து கொண்டிருக்கும். இதனை அச்சுப்பொறி, கணினி, விளையாட்டுக் கருவி அல்லது பிற சாதனத்தில் எளிதாகப் பொருத்த முடியும். தொலைக் காட்சிப் பெட்டியுடன் இணைத்து விளையாடக் கூடிய பெரும்பாலான ஒளிக்காட்சி விளையாட்டுகள் (Video games) இதுபோன்ற ரோம் பொதியுறைகளில் கிடைக்கின்றன.

ROM emulator :ரோம் மாதிரி :ரோம் போலிகை : ஒர் இலக்குக் கணினியில் ரோம் சிப்புகள் இருக்கும் இடத்தில் இணைக்கப்பட்டுள்ள, ரேம் (RAM) நினைவகச் சிப்புகள் அடங்கிய ஒரு சிறப்பு மின்சுற்று. தனியான ஒரு கணினி இந்த ரேம் சிப்புகளில் தகவலை எழுதும். இலக்குக் கணினி ரோம் சிப்புகளைப் படிப்பதற்குப் பதிலாக இந்த ரேம் சிப்புகளிலுள்ள தகவலைப் படித்துக் கொள்ளும். ரோமில் இருத்தி வைக்கும் நிரல்களைச் சரிபார்க்க (debug), அதிக செலவும் தயாரிப்பு காலமும் ஆகும்.ரேம் சிப்புகள் இல்லாமலேயே இந்தவகை விலை குறைவான ரேம் சிப்புகளைக் கொண்டு செய்து முடிக்க முடியும். ஈப்ரோம் (EPROM) சிப்புகளைக் காட்டிலும் ரோம் போலிகை விலை அதிகம் எனினும், ஈப்ரோமை விட மிகவிரைவாக உள்ளடக்கத்தை மாற்ற முடியும் என்பதால் இந்த வகை ரேம் சிப்புகளே பெரிதும் பயன்படுத்தப்படுகின்றன.

root account : வேர்க் கணக்கு:மூலக்கணக்கு :முதன்மைக் கணக்கு : யூனிக்ஸ் இயக்க முறைமையில் கணினியின் செயல்பாடுகளை முழுமையாகக் கட்டுப்பாடு செய்