பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/421

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Society For Information

419

software publishing


|

மேலாண்மை நெறிமுறை ஆகும். எஸ்என்எம்பீ-யில் முகவர்கள் எனப்படும் வன்பொருள் அல்லது மென்பொருள்கள், பிணையத்தில் இணைக்கப்பட்டுள்ள பல்வேறு சாதனங்களின் நடவடிக்கைகளைக் கண்காணித்து, பிணையப் பணி நிலையத் திரையில் காட்டுகின்றன. ஒவ்வொரு சாதனத்தின் கட்டுப் பாட்டுத் தகவல்களும் மேலாண்மைத் தகவல் தொகுதி என்னும் கட்டமைப்பில் பராமரிக்கப்படுகின்றன.

Society For Information Management: தகவல் மேலாண்மைக் கழகம்: சிகாகோவில் செயல்படும் ஒரு தொழில்முறை அமைப்பு. தகவல் அமைப்புகளின் நிர்வாகிகளுக்கானது. முன்பு இதன்பெயர் மேலாண்மைத் தகவல் அமைப்புக் கழகம்.

soft/hard copy : மென்/வன் நகல்: வட்டு/அச்சு நகல்.

soft page break: மென்பக்க முறிப்பு.

software-based modem : மென் பொருள் அடிப்படையிலான இணக்கி (மோடம்): மறுநிரலாக்கத்தகு இலக்கமுறைச் சமிக்கை பொதுப்பயன் செயலிச் சிப்புவைக் கொண்ட ஒர் இணக்கி. இதில், இணக்கியின் செயல்பாடுகள் சிலிக்கானில் பொறிக்கப்பட்ட தனி சிப்புவுக்குப் பதிலாக ரேம் (RAM) அடிப்படை யிலான நிரல் நினைவகத்தைக் கொண்டுள்ளன. மென்பொருள் அடிப்படையிலான இணக்கிகளின் பண்புக் கூறுகளையும் செயல்பாடுகளையும் மாற்றியமைக்க எளிதாக தகவமைவுகளைத் திருத்திய மைக்க முடியும்.

software-dependent : மென்பொருள் சார்பானது : அதற்காகவே உருவாக்கப்பட்ட ஒரு குறிப்பிட்ட நிரலோடு அல்லது நிரல் தொகுப்போடு இறுகிப் பிணைக்கப்பட்ட ஒரு கணினி அல்லது ஒரு மின்னணுச்சாதனம்.

software error control : மென்பொருள் பிழைக் கட்டுப்பாடு.

software flexibility : மென்பொருள் நெகிழ்வுத் தன்மை.

software handshake : மென்பொருள் கைகுலுக்கல் : பொதுவாக தகவல்கள் ஒரு தடத்திலும் கட்டுப்பாட்டுச் சமிக்கைகள் தனித் தடத்திலும் அனுப்பி வைக்கப்படுவதுண்டு. அப்படியில்லாமல் இரண்டு இணக்கிகளுக் கிடையே தொலை பேசி இணைப்பு வழியே நடைபெறும் தகவல் தொடர்பில் இருப்பதுபோலத் தகவல்கள் அனுப்பப்படும் அதே இணைப்புக் கம்பிகள் வழியாகவே கட்டுப்பாட்டுச் சமிக்கைகளையும் அனுப்பிவைத்தல்.

software installation engineer: மென்பொருள் நிறுவு பொறியாளர்.

software, integrated : ஒருங்கிணை மென்பொருள்.

software integrated circuit:மென்பொருள் ஒருங்கிணைவு மின்சுற்று : சுருக்கமாக மென்பொருள் ஐசி என்றழைக்கப்படுவதுண்டு. ஒர் ஒருங்கிணைவு மின்சுற்று (ஐசி) ஒரு தருக்கப் பலகையில் பொருந்துமாறு வடிவமைக்கப்படுவதுபோல, ஏற் கெனவே உள்ள ஒரு மென் பொருள் கூறினை ஒரு நிரலுக்குள் பொருந்து மாறு வடிவமைத்தல்.

software patent :மென்பொருள் காப்புரிமை.

software publishing :மென்பொருள் பதிப்பீடு : வழக்கத்துக்கு மாறான