பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/471

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

VBX

469

venn diagram


என்பதைக் குறிக்கும் பெரும்புவிப்பிரிவுக் களப்பெயர்.

VBX:விபிஎக்ஸ்:விசுவல் பேசிக் வழக்காற்று இயக்குவிசை என்பதன் சுருக்கம்.ஒரு விசுவல் பேசிக் பயன்பாட்டு மென்பொருளில் ஒரு சிறு பணியை முடிப்பதற்காக தனியே உருவாக்கப்பட்ட ஒரு மென்பொருள் கூறு.விபிஎக்ஸ் என்பது ஒரு தனியான இயங்கு கோப்பாகும்.இது பெரும்பாலும் விசுவல் பேசிக் மொழியில் எழுதப்பட்டிருக்கும். பயன்பாடு இயங்கிக் கொண்டிருக்கும்போது இயங்கு நிலையில் பயன்பாட்டுடன் இணைக்கப்படும்.விசுவல் பேசிக்கில் எழுதப்படாத பயன்பாடுகளில்கூட விபிஎக்ஸ் இயக்குவிசைகளைப் பயன்படுத்திக் கொள்ளமுடியும்.விபிஎக்ஸ் தொழில்நுட்பத்தை மைக்ரோ சாஃப்ட் உருவாக்கிய போதிலும் பெரும்பாலான விபிஎக்ஸ் இயக்கு விசைகளை மூன்றாம் நிறுவனங்கள் தயாரித்து வெளியிட்டுள்ளன.விபிஎக்ஸ் இன்னும் பயன்பாட்டில் இருந்தபோதிலும், தற்போது அதற்குப் பதிலாக ஒசிஎக்ஸ்,ஆக்டிவ் எக்ஸ் போன்ற தொழில்நுட்பங்கள் வந்துவிட்டன.

.VC:விசி:ஓர் இணையதள முகவரி மேற்கிந்தியத் தீவுகளான செயின்ட் வின்சென்ட், கிரினே டைன்ஸ், விண்டுவார்டு ஆகிய பகுதிகளைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

VCACHE:விகேஷ்:விண்டோஸ் 95 விஃபேட் (VFAT) இயக்கியுடன் பயன்படுத்தப்படும் வட்டு இடைமாற்று மென்பொருள். 32-பிட் குறிமுறை கொண்டது. பாதுகாக்கப்பட்ட பாங்கில் செயல்படக் கூடியது.ரேம் நினைவகத்தில், இடைமாற்றுப் பணிக்காகப் பயனாளர் தலையிட்டு நினைவக ஒதுக்கீடு செய்ய வேண்டியதில்லை. விகேஷ், தானாகவே இடம் ஒதுக்கீடு செய்து கொடுக்கும்.

WCOMM:விகாம்: விண்டோஸ் 95 இயக்க முறைமையில் இயங்கும் தகவல் தொடர்புக்கான சாதன இயக்கி (device driver). இது, ஒருபுறம் விண்டோஸ் அடிப்படையிலான பயன்பாடுகளுக்கும் இயக்கிகளுக்குமான இடைமுகத்தையும், மறுபுறம் துறை இயக்கிகள், இணக்கிகளுக்கான இடைமுகத்தையும் வழங்குகின்றது.

VCR-style mechanism:விசிஆர் பாணி பொறிநுட்பம்: 1.கணினியில் திரைப்படக் கோப்புகளை இயக்க, திரையில் தோற்றமளிக்கின்ற,ஒளிக்காட்சிப் பேழைப்பதிவி (VCR) போன்று தோற்றமளிக்கின்ற ஒரு பயனாளர் இடைமுகம் (user inter face) 2.ஒரு மடிக்கணினியையோ, ஒரு கையேட்டுக் கணினியையோ,பணிநிலையக் கணினி தன்னுடன் பொருத்திக் கொள்வதற்கென அமைந்துள்ள இழுபொறி பொருத்து பொறிநுட்பம். மின்சார அடிப்படையில் முரண்பாடில்லாத பாதுகாப்பான பாட்டை இணைப்பு ஆகும்.

vendor code:விற்குநர் குறியீட்டெண்: வணிகர் குறியீட்டெண்,

venn diagram:வென் வரைபடம்: கணங்களின் (sets) மீதான செயல்பாடுகளின் விடையைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் ஒருவகை வரைபடம்.ஒரு செவ்வகம் முழுதளாவிய கணத்தைக் குறிக்கும்.அதனுள் இருக்கும் வட்டங்கள்,பொருள்களின் கணங்களைக் குறிக்கின்றன. இரண்டு கணங்களுக்கிடையேயான