பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/477

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

video port

475

virtual desktop


ஒரு தொலைபேசித் தடத்தில் ஒளிக்காட்சி சமிக்கைகள் மற்றும் குரலை அனுப்பவும் பெறவும் திறன் பெற்றது.வழக்கமான தொலைபேசி இணைப்பு வழியாக ஒளிக்காட்சிப் பேசியினால் உறைநிலை-சட்ட ஒளிக் காட்சியை மட்டுமே அனுப்ப முடியும்.

video port:ஒளிக்காட்சித் துறை: ஒரு கணினியிலிருந்து திரையகத்துக்கு ஒளிக்காட்சிச் சமிக்கைகளை அனுப்பிவைக்கப் பயன்படும் வடத்தினை இணைக்கும் இணைப்புவாய்.

video server:ஒளிக்காட்சி வழங்கன்: கேட்டதும் கிடைக்கும் இலக்கமுறை ஒளிக்காட்சி மற்றும் அகலக்கற்றை ஊடாடு சேவைகளை ஒரு விரிபரப்புப்பிணையம் வழியாகப்பொதுமக்களுக்கு வழங்குவதற்கென வடிவமைக்கப்பட்ட வழங்கன்

video standard:ஒளிக்காட்சி தரம்.

video tape:ஒளிக்காட்சி நாடா.

viewer:காட்சிப்படுத்தி:ஒரு கோப்பின் வெளிப்பாட்டை அதனை உருவாக்கிய பயன்பாட்டுத் தொகுப்பு காண்பிக்கும் அதே முறையில் திரையில் வெளிப்படுத்தும் ஒரு மென்பொருள். எடுத்துக்காட்டு: ஜிஃப்,ஜேபெக் கோப்புகளில் பதிவு செய்யப்பட்டுள்ள படிமங்களை இன்டர்நெட் எக்ஸ்புளோரர் காட்சிப் படுத்தும்.

vine:வைன்,படர்கொடி: ஒலி நாடாத் தகவலை ஒன்றிலிருந்து இன்னொன்று என வரிசையாக நகலெடுத்து வினியோகிக்கும் முறை. திராட்சைக்கொடி படர்ந்து செல்வதுபோல இந்த நடவடிக்கை அமைவதால் இப்பெயர் ஏற்பட்டது. படர்கொடி நாடாக்களில் இலக்கமுறை வடிவத்தில் தகவல் பதியப்படுகிறது.எனவே நகலெடுப்பதால் ஒலியின்தரம் குறைந்துபோவதில்லை.

virtual card calling:தொலைபேசி அழைப்பு அட்டை:மெய்நிகர்அட்டை அழைப்பு.

virtual channel:மெய்நிகர் தடம்: ஒத்திசையாப் பரிமாற்றப் பாங்கினில் (Asynchronous Transfer Mode-ATM) ஒரு அனுப்பியிலிருந்து ஒரு வாங்கிக்கு அனுப்பப்பட்ட ஒரு தகவல்,பயணம் செய்கிற பாதை.

virtual circuit: மெய்நிகர் மின்சுற்று; அனுப்பிக்கும் வாங்கிக்கும் இடையே நேரடி இணைப்பு இருப்பது போன்று தோற்றமளிக்கும் ஒரு தகவல் தொடர்பு இணைப்பு.ஆனால் உண்மையில் அவ்விணைப்பு பல சுற்றுப் பாதைகளில் சுற்றி இணைக்கப்பட்டிருக்கும்.

virtual classroom training:மெய்நிகர் வகுப்பறைப் பயிற்சி.

virtual community:மெய்நிகர் குழுமம்: மெய்நிகர் சமூகக்குழு.

virtual control programme interlace: மெய்நிகர் கட்டுப்பாட்டு நிரல் இடைமுகம்: இன்டெல் 386 மற்றும் மேம்பட்ட செயலிகள் உள்ள கணினிகளில் மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் போன்ற பல்பணிச் சூழலில் எம்எஸ்-டாஸ் நிரல்கள் விரிவாக்கப்பட்ட நினைவகத்தை அணுக அனுமதிப்பதற்கான வரன்முறை.

virtual desktop:மெய்நிகர் முகப்புத்திரை: விண்டோஸ் பணிச்சூழலில் பணிபுரிந்து கொண்டிருக்கும்போது சில பயன்பாட்டுத் தொகுப்புகளின் சாளரம் திரையின் முழுப்பகுதி