பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/484

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Von Neumann Architecture

482

vu


தொழில்நுட்பத்தை வரைமுறைப்படுத்துவதை எதிர்த்தார்.வான் தொழில்நுட்பத்தை பொதுமக்களிடம் கொண்டுசெல்ல ஆர்வம் காட்டினார்.

Von Neumann Architecture:வான் நியூமன் கட்டுமானம்: சிறந்த கணிதவியல் அறிஞரான ஜான் வான் நியூமன் உருவாக்கிய,கணினி அமைப்பின் மிகப்பொதுவான கட்டமைப்பு.நிரல் என்னும் கருத்துரு பயன்படுத்தப்பட்டது.நிரலை நிரந்தரமாகக் கணினியில் சேமித்து வைத்துக்கொண்டு கையாளமுடியும்.பொறி அடிப்படையிலான ஆணைகள் மூலம் அதனை மாற்றியமைக்க முடியும்.வரிசைமுறையிலான செயலாக்கம் இக்கட்டு மானத்தின் சிறப்புக்கூறு. வரிசை முறை ஆணைகளினால் ஏற்படும் குறைபாடுகளைப் போக்க பிற்காலத்தில் இணைநிலை கட்டுமானங்கள் உருவாயின.

VPD:விபீடி: மெய்நிகர் அச்சுப் பொறிச் சாதன இயக்கி என்று பொருள்படும் Virtual Printer Device Driver என்ற சொல்தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர்.

VRML:வீஆர்எம்எல்: மெய்நிகர் நடப்பு மாதிரிய மொழி என்று பொருள்படும் Virtual Reality Modelling Language என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர்.சில ஒளிக்காட்சி விளையாட்டுகளில் இருப்பதுபோன்ற முப்பரிமாண ஊடாடு வலை வரைகலைக்கான காட்சி விளக்க மொழி.பயனாளர்,வரைகலைப் படிமங்களுடனும், பொருட்களுடனும் சேர்ந்து நடமாடலாம்.1994இல் மார்க் பெஸ்ஸி,டோனி பாரிசின் (Mark Pesce And Tony Parisin)ஆகியோரால் உருவாக்கப்பட்டது. சிலிக்கான் கிராஃபிக்ஸ் நிறுவன இன்வென்டார் கோப்பு வடிவாக்கத்தின் உட்பிரிவாகும் இது. விஆர்எம்எல் கோப்புகளை ஓர் உரைத் தொகுப்பியில் எழுத முடியும்.விஆர்எம்எல் கோப்புகள் ஒரு ஹெச்டீடீபீ வழங்கனில் சேமிக்கப்படுகின்றன.இவற்றுக்கான தொடுப்புகளை ஒரு ஹெச்டீ எம்எல் ஆவணத்தில் சேர்ப்பதன் மூலம் பயனாளர் இக்கோப்புகளை நேரடியாக அணுக முடியும்.

VT-52:TV-100:VT-200:விடீ-52:விடீ-100:விடீ-200: டிஜிட்டல் எக்யூப்மென்ட் கார்ப்பரேஷன் தயாரித்து வெளியிட்ட முனையங்களின் மாதிரி எண்கள்.செல்வாக்குப் பெற்ற கட்டுப்பாட்டுக் குறிமுறைகள் இந்த முனையங்களில் பயன்படுத்தப்பட்டன.ஒரு நுண் கணினியை இதுபோன்ற முனையங்களாகச் செயல்படுமாறு மாற்றியமைக்க அதற்குரிய மென்பொருள் பயன்படுத்தப்படவேண்டும்.

VTD:விடீடி:மெய்நிகர் நேரங்காட்டிச் சாதன இயக்கி என்று பொருள்தரும் Virtual Timer Device Driver என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர்.

.vt.us:.வி.டி.யு.எஸ்: ஓர் இணையதள முகவரி அமெரிக்க நாட்டு வெர்மான்ட் மாநிலத்தைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும்புவிப்பிரிவுக் களப்பெயர்.

.VU: வியு: ஓர் இணையதள முகவரி வானுவாட்டு நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும்புவிப்பிரிவுக் களப்பெயர்.