பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

automatic backyup

48

autolay


குறிகள் ஒரேபுறம் திரும்பிய நிமிர்ந்த குறிகள் ("") ஆகும். இதுபோன்ற ஒற்றை மற்றும் இரட்டை மேற்கோள் குறிகள் ஆவணத்தில் இருபுறம் அடைக்கும் வரைந்த குறிகளாய் ("மற்றும்") மாறி விடும். பயனாளர் இதுபோன்ற தானியங்கு பிழைதிருத்த/பதிலீட்டு வசதிகளை செயலுமைப்படுத்த வேண்டும்.

automatic backyup : தானியங்கு காப்பு நகல்.

autoform : உடனடிப் படிவம்.

autohide : தானாக மறைதல்.

AUTOEXE.BAT : ஆட்டோஇஎக்ஸ் இ.பேட்; தானியங்கு நிரல்: எம்எஸ்-டாஸ் இயக்க முறைமையில் பயன்படுத்தப்படும் கோப்பு. ஆணைகளடங்கிய தொகுதிக்கோப்பு (batch file). கணினி இயக்கப்படும்போது தானாக இயக்கப்படும் சிறப்புப் பயன் கோப்பாகும். தொடக்கக் காலப் பதிப்புகளில் பயனாளர் இக்கோப்பினை உருவாக்க வேண்டும். பிந்தைய டாஸ் பதிப்புகளில், இயக்க முறைமை கணினியில் நிறுவப்படும்போதே இக்கோப்பு உருவாக்கப்பட்டுவிடும். பயனாளரின் விருப்பத்திற்கு ஏற்றவாறு முன் நிறுவப்பட்ட சாதன இயக்கிகளுடன் கணினியும், இயக்க முறைமையும் தயாரான நிலையில் இருப்பதற்குரிய ஆணைகள் இந்தக் கோப்பினில் எழுதப்பட்டிருக்கும்.

automatic carriage return : தானியங்கு நகர்த்தி திரும்பல்.

automatic dictionary : தானியங்கு அகராதி; தானியங்கு அகரமுதலி.

automatic digital network : தானியங்கு இலக்கமுறை பிணையம்.

automatic network switching : தானியங்குபிணைய இணைப்பாக்கம்.

automatic hardware dump : தானியங்கு வன்பொருள் திணிப்பு.

automatic interrupt : தானியங்கு இடைமறிப்பு: தானியங்கு குறுக்கீடு.

auto outline : தானியங்கு சுற்றுக்கோடு

automatic verifier : தானியங்கு சரிபார்ப்பி.

automatic recharge : தானியங்கு மறுமின்னேற்றம்.

automatic system reconfiguration : தானியங்கு முறைமை மறுதகவமைப்பு : ஒரு கணினியில் புதிதாக ஒரு வன்பொருளையோ மென்பொருளையோ சேர்க்கும்போது அல்லது மாற்றும்போது கணினி முறைமை தானாகவே தகவமைத்துக் கொள்ளுமாறு செய்தல்.

auto redial தானியங்கு மறு சுழற்றுகை.

auto repeat : தானியங்கு மீள் செயற்பாடு.

auto restart : தானியங்கு மீள் தொடக்கம்.

auto serve : தானியங்கு வழங்கல்.

automatic typewriter : தானியங்கு தட்டச்சுப்பொறி.

automatic message switching : தானியங்குச் செய்தி இணைப்பாக்கம்.

autoplay : தானியக்கம் : குறுவட்டு இயக்ககத்தில் ஒரு குறுவட்டு வைக்கப்பட்டவுடன் தானாகவே இயங்குமாறு அமைக்கப்பட்டுள்ள ஒரு வசதி, விண்டோஸ் 95/98 இயக்க முறைமையில் உள்ளது. அந்தக் குறுவட்டில் Auto-Run-INF என்னும்