பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

bits per inch

62

bloatware


எனப்படுகிறது. ஏனைய நுண்செயலிகள் செய்கின்ற அதே பணிகளை இந்த நுண்செயலிகள் செய்து முடிக்க, ஆணைத் தொடர் அமைக்க முடியும்.

bits per inch : அங்குலத்துக்கு இத்தனை துண்மிகள் : தகவல் சேமிப்புத் திறனை அளக்கும் அலகு. ஒரு வட்டில் ஒரு வட்டத்தடம் (track) சுற்றில் கொள்ளுகின்ற துண்மிகளின் எண்ணிக்கை.

bit synchronous protocol : துண்மி ஒத்தியங்கு நெறிமுறை.

bitonal : இரு வண்ண.

BIX : பிக்ஸ் : எண்மித் தகவல் பரிமாற்றம் என்று பொருள்படும் Byte Information Exchange என்பதன் தலைப்பெழுத்துக் குறும்பெயர். பைட் (Byte) இதழ் தொடங்கிவைத்த ஒர் இணையச் சேவை. இப்போது டெல்ஃபி இணையச் சேவைக் கழகம் (Delphi Internet Services Corporation) இதனை வாங்கிச் செயல் படுத்தி வருகிறது. மின்னஞ்சல், மென்பொருள் பதிவிறக்கம், மென் பொருள்/வன்பொருள் தொடர் புடைய கருத்தரங்குகள்-போன்ற சேவைகளை பிக்ஸ் வழங்கி வருகிறது.

biz newsgroups : வணிகச் செய்தி அரங்கம் : வணிகச் செய்திக் குழுக்கள் : இணையத்திலுள்ள செய்திக் குழுக்களில் ஒருவகை. வணிகம் பற்றிய விவாதங்களே இக்குழுக்களில் நடை பெறுகின்றன. ஏனைய செய்திக் குழுக்களில் இருப்பதுபோன்று அல்லாமல், இவற்றில் விளம்பரம் மற்றும் ஏனைய விற்பனை தொடர்பான தகவல்களை வெளியிடவும் அனுமதி உண்டு.

.bi: பிஜே : இணையத் தளங்கள் (sites) பல்வேறு களங்களாக (domain) வகைப்படுத்தப்படுகின்றன. பெருங்களம் (major domain),உட்களம் (minor domain) என்ற பிரிவுகளும் உண்டு. இணைய தள முகவரியின் இறுதிப் பகுதியில் இருப்பது பெருங்களப் பிரிவு. .com, .org, .edu, ..என்று இவை அமையும். ஒரு நாட்டின் பெயரைக் குறிக்கும் சொல்லும் பெருங்களப் பிரிவைக் குறிப்பது உண்டு. முகவரியின் இறுதியில் .in என்று அமைந்தால் இந்தியாவைக் குறிக்கும். .bi என்பது பெனின் (Benin) நாட்டைக் குறிக்கிறது.

blank database : வெற்றுத் தரவுத் தளம்.

blank lines : வெறுங்கோடுகள்.

blank space : வெற்றிடம்.

blickering : பளிச்சிடுதல்.

blind carbon copy : அறியா நகல். காண்க : bcc

blink speed : மின்னும் வெகம்; துடிக்கும் வேகம் : கணினி இயங்கிக் கொண்டிருக்கும்போது, ஒரு பயன்பாட்டுத் தொகுப்பைத் திறந்தவுடன், எடுத்துக்காட்டாக, ஒரு சொல் செயலியைத் திறந்தவுடன், திரையில் நாம் தகவலைத் தட்டச்சுச் செய்ய வசதியாக ஒரு குறிப்பிட்ட இடத்தில் சுட்டுக்குறி (cursor) துடித்துக் கொண்டிருக்கும். சுட்டுக்குறி மின்னுகின்ற, துடிக்கின்ற வேகத்தைக் குறிக்கும் சொல் இது.

bloat : உப்பல்.

bloatware : உப்பிய மென்பொருள் : பயனாளரின் நிலைவட்டில் இயல்புக்கு அதிகமாய் ஏராளமான இடத்தை அடைத்துக் கொண்டிருக்கும் கோப்புகளையுடைய மென்பொருள். குறிப்பாக, அதே மென்பொருளின் முந்தைய பதிப்போடு