பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

broadband coaxial cable

69

.bs


லாம்.அவ்வாறு நகலெடுத்த கோப்புகளை மீண்டும் முந்தைய கோப்புறையில் மாற்றும்போது, திருத்தம் செய்யப்பட்ட கோப்புகளை நாளதுவரை புதுப்பித்துக் கொள்ளும். மேசைக்கணினி, மடிக்கணினி இரண்டையும் தம் அலுவலகப் பயணிகளுக்காகப் பயன்படுத்துவோர்க்கு இது மிகவும் உதவியாக இருக்கும்.

broadband coaxial cable : அகலக்கற்றை இணை அச்சு வட்டம்.

Bright : பொலிவு ; ஒளிர்வு.

bring to front : முன்னால் கொண்டு வா.

brittle : நொறுங்கக் கூடிய.

broadband modem : அகலக்கற்றை இணக்கி: அகல அலைக்கற்றையில் செயல்படும் பிணையத்தில் பயன்படும் இணக்கி. ஓரே வடத்தில் பல்வேறு பிணையங்களின் தகவல் பறிமாற்றம் நடைபெற அகலக்கற்றைத் தொழில்நுட்பம் அனுமதிக்கிறது.வானொலிச் செயல்பாடு போல இரண்டு பிணையங்களுக்கிடையேயான உரையாடல் வெவ்வேறு அலைவரிசைகளில் நடைபெறுவதால், ஒரு பிணையத்தின் தகவல் போக்குவரத்து இன்னொரு பிணையத்தின் போக்குவரத்தில் குறுக்கிடுவதில்லை.

broadband network : அகலக் கற்றை பிணையம் : தகவல் போக்குவரத்து ரேடியோ அலைவரிசையில் உள்கற்றையிலும் வெளிக் கற்றையிலும் தனித்தனியாக நடைபெறக்கூடிய குறும்பரப்புப் பிணையம்.அகலக்கற்றைப் பிணையத்திலுள்ள பணி நிலையங்கள் இணையச்சு அல்லது ஒளியிழை வடங்களினால் பிணைக்கப்பட்டுள்ளன.இவற்றின் வழியாக சாதாரணத் தகவல், குரல் மற்றும் ஒளிக்காட்சி ஆகியவற்றை ஒரே நேரத்தில் வெவ்வேறு அலைவரிசைகளில் அனுப்ப முடியும்.அகலக்கற்றைப் பிணையம் உயர்வேகத்தில் செயல்பட முடியும் (வினாடிக்கு 20மெகாபைட்டுக்கும் மேல்).ஆனால் சாதாரண அடிக்கற்றைப் பிணையங்களைவிட செலவு அதிகமாகும்.நிறுவுவது கடினம்.வடத் தொலைக்காட்சியின் தொழில்நுட்பமே இப்பிணையத்தில் பின்பற்றப்படுகிறது.

broadband & video : அகல அலைக்கற்றை மற்றும் ஒளிக்காட்சிக் கலந்துரையாடல் (conferencing).

broadcast storm : அலைபரப்புப் புயல் : ஒரு பிணையத்தில் நடைபெறும் தகவல் ஒலிபரப்பு, பல்வேறு சேவைமையக் கணினிகளை ஒரே நேரத்தில் பதிலிறுக்கத் தூண்டும்போது ஏற்படுகின்ற போக்குவரத்து நெரிசல்.ஒரு பிணையத்தில் பழைய டீசிபீ/ஐபீ திசைவிகளையும், புதிய நெறிமுறைகளை ஏற்கும் திசைவிகளையும் கலந்து பயன்படுத்துவதால் அலைபரப்புப் புயல் ஏற்படுகிறது. பிணையம் உருகிக் கரைதல் (network meltdown) என்றும் கூறுவர்.

browse button : உலாவு பொத்தான்.

browse option : உலாவுத் தேர்வு.

browse mode : உலாவுப் பாங்கு.

browse stylesheets : உலாவி பாணித்தாள்கள்.

browse view : உலாவுத் தோற்றம்.

.bs : .பிஎஸ் : ஓர் இணையதளம் பஹாமஸ் நாட்டில் உள்ளது என்பதைக் குறிக்கும் பெருங்காலப் பெயர். தள முகவரியின் இறுதியில் இடம்பெறும்.