பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எழுத்து செவ்வகம் மின்னூட்டப் பினணப்பு சாதனம்

கொள்வதில் பிழை நேர வாய்ப் புண்டு. பிழையின்றி அறிய வேண்டு மெனில் எழுத்துகள் இந்த வடி வமைப்பில்தான் இருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடுகள் சில கணினி அமைப்புகளில் உள்ளன. ஆனால் சில கணினிகள், தோரணி ஒப்பீட்டு (pattern matching) தொழில் நுட்ப அடிப்படையில் அமைந்த மென் பொருளின் உதவியுடன் எப்படிப்பட்ட வடிவமைப்பிலுள்ள எழுத்துகளையும் அடையாளம் கண்டுகொள்ளும்.

character rectangle : எழுத்து செவ் வகம் : ஒர் எழுத்தின் வடிவத்தைர எழுத்துச் செவ்வகம் வரைகலை வடிவில் படப்புள்ளி களால் குறிப்பிட எடுத்துக்கொள் ளப்படும் செவ்வகப் பரப்பு.

characters per inch: ஒர் அங்குலத்தில் எழுத்தெண்ணிக்கை : ஒர் அங்குல நீளத்தில், குறிப்பிட்ட உருவளவில் (size) அமைந்த, ஒரு குறிப்பிட்ட எழுத்துரு வடிவில் எத்தனை எழுத்துகள் இடம்பெற முடியும் என்கிற அளவீடு. இந்த எண்ணிக்கை எழுத்து வடிவின் இரண்டு பண்பியல்புகளினால் பாதிக்கப்படுகிறது. ஒன்று அதன்

Charge Coupled Device மின்னூட்டப்பிணைப்பு சாதனம் புள்ளி (பாயின்ட்) அளவு. அடுத்தது, அந்தக் குறிப்பிட்ட எழுத்துருவில் எழுத்துகளின் அகலம். ஒற்றையிட எழுத்துருக்களில் எழுத்துகள் சம மான அகலத்தைக் கொண்டிருக்கும். தகவுப் பொருத்தமுள்ள எழுத்துருக் களில் எழுத்துகளின் அகலம் வேறு படும். எனவே ஒர் அங்குலத்தில் எத்தனை எழுத்துகள் என்பது சராசரி யாகக் கணக்கிடப்படும். ஒர் அங்குலத்தில் எத்தனை எழுத்துகள் character per inch என்பதன் தலைப்பெழுத்துக் குறும்பெயர் சிபிஐ (CPI) எனப்படுகிறது.

character space: எழுத்து இடைவெளி

characters, special சிறப்பு எழுததுகள.

character style ; எழுத்தின் பாணி எழுத்தின் அழகமைவு தடித்த எழுத்து, சாய்வெழுத்து, அடிக் கோட்டெழுத்து, சிறிய எழுத்து, பெரிய எழுத்து என எழுத்துகளின் பாங்கு மாறுபடுகிறது. எழுத்துரு (font) என்பதையும் எழுத்தின் பாங்காகச் சேர்ப்பது, இயக்க முறை மையையும் அந்தக் குறிப்பிட்ட மென்பொருளையும் சார்ந்ததாகும்.

character user interface: எழுத்து வழி பயனாளர் இடைமுகம்; எழுத்தமைப் பணிச் சூழல் Character User Interface என்ற தொடரின் தலைப் பெழுத்துக் குறும்பெயர். வெறும் எழுத்துகளை மட்டுமே திரையில் காட்டவல்ல பயனாளர் இடைமுகம், கணினிப் பணிச்சூழல். வரை கலைப் பணிச்சூழலுடன் ஒப்பிட்டு அறிக.

character view : எழுத்து தோற்றம் Charge Coupled Device (CCD) : மின்னூட்டப் பிணைப்புச் சாதனம்

(சிசிடி)