பக்கம்:கணிப்பொறி அகராதி.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



joy

139

Kee


joystick - A vertical lever moving the cursor vertically or horizontally. கட்டுப்பாட்டுக்கோல் : செங் குத்துக்கோல் குறிப்பியைச் செங்குத்தாக அல்லது கிடைமட்டமாக நகர்த்துவது.

jump - An instruction in machine code causing a computer to stop executing a programme to move to another part of the programme. தாவல்: எந்திரக் குறிமுறையிலுள்ள கட்டளை ஒரு நிகழ் நிரல் நிறைவேறுவதை நிறுத்தி, அதை மற்றொரு நிகழ்நிரலின் ஒரு பகுதிக்குச் செல்லுமாறு கணிப்பொறியைச் செய்வது.

junk- Garbled data, eg, signals accumulating in communications. கூளம் : குழம்பிய தகவல் எடு செய்தித் தொடர்பில் குவியும் குறிகைகள்.

justification- Spacing of text or graphics to produce an even vertically aligned right or left hand margin. நெருக்கிச் செய்தல் : பாடம் அல்லது வரைகலைக்கு இடைவெளிவிட்டுச் செங்குத்தாகவும் சமமாகவும் வரிசையாகவும் உள்ளதுமான விளிம்பு அல்லது ஓரத்தை இடப்பக்கம் அல்லது வலப்பக்கம் அமைத்தல்.ஒ.indentation.

K

Kanian Family of E-zines - கணியன் குடும்ப மின்னிதழ்கள் : இவை நான்கு : 1) தமிழ் நாளிதழ் 2) சினிமா திரை யுலக இதழ் 3) அருள் ஆன்மிகம் 4) மாணவன் மாணவர் இதழ்.

Kanithamizh Sangam - கணித்தமிழ்ச் சங்கம் : சென்னையில் செயற்படுவது நோக்கம் கணிப் பொறித் தமிழை வளர்ப்பது. தலைவர் அ. இளங்கோவன், செயலர் ஆண்டோ பீட்டர் கணி தமிழ் 2001 என்னும் நான்கு நாள் விற்பனை விழாவைச் சென்னையில் நடத்தியது (24-12-2000 - 27-12-2000).

Katiesoft- கேட்டிசாஃப்ட் : ஒரு பயன்பாட்டகம் ஒரே சமயத்தில் 4 தளங்களைக் கண்ணோட்டமிடவும் பார்க்கவும் பயன்படுவது.

KBPS - Kilobits per second. கேபிபிஎஸ் : ஒரு வினாடிக்கு இத்தனை கிலோபிட்டுகள்.

KCS - A thousand characters per second. கேசிஎஸ் : ஒரு வினாடிக்கு ஆயிரம் உருக்கள்.

Keely, Bert - பெர்ட் கீலி: மைக்ரோ சாப்ஃட் நிறுவனத் தின் சிற்பி. பலகை வடிவத் தனியாள் கணிப்பொறியை வடிவமைத்து அறிமுகப்படுத்த உள்ளார்.