பக்கம்:கணிப்பொறி அகராதி.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

net

165

nin


அட்டை, வஇஅ : தகவல் மாற்றங்களை ஒருங்கிணைக்கும் வேலையைச் செய்யும் கருவியமைப்பு திட்ட வ.இ அக்கள்: எத்தர்நட் / ஆர்க்நட்

network programme - வலையமைவு நிகழ்ச்சி : ஒருங்கிணைப்பு நிகழ்ச்சி: வானொலி, தொலைக்காட்சி.

network topology - வலையமைவு இட அமைப்பு : ஒரு வலையமைவிலுள்ள பல கணிப்பொறிகளையும் இணைக்கும் செய்தித்தொடர்பு வழிகளின் திட்ட அமைப்பு. இவ்வலையமைவிலுள்ள ஒவ்வொரு கணிப்பொறியும் கணு எனப்படும். இவ்வமைப்பு மூவகை :

1) நீள் போக்குவாய்,

2) விண்மீன்,

3) வளையம்.

இதில் கணக்கில் கொள்ள வேண்டியவை : 1) கணுவகை 2) செயல்திறன் 3) பயன் படுத்தும் கம்பி வகை 4) ஆகும் செலவு, கலப்பின இட அமைப்புகளும் உண்டு.

networks, types of - வலையமைவு வகைகள் : இவை முதன்மையாக மூவகை.

1) உள்ளூர்ப் பகுதி வலையமைவுகள், உபவ (LAN) . இவை கம்பிகளால் இணைக்கப்பட்ட கணிப்பொறித் தொகுதி. ஒரு தனிக் கட்டிடத்திலோ கட்டிடத்தொகுதிகளிலோ இருக்கலாம். கணிப்பொறிகள் எண்ணிக்கை இரண்டிலிருந்து இரு நூறுகள் வரை இருக்கலாம். பொதுவாக உபவ என்பது வன்பொருள், மென்பொருள் தகவல் ஆகியவற்றைப் பகிர்ந்து கொள்வது.

2) அகல் பகுதி வலையமைவுகள் அபவ (WAN) . இரண்டிற்கு மேற்பட்ட உள்ளுர்ப் பகுதி வலையமைவுகள் சேர்ந்ததே அபவ என்பது. தனிப்பட்ட உபவக்களை உரிய இணைப்புகள், ஒளி இழை வடங்கள், செயற்கை நிலா ஆகியவை மூலம் இணைக்கலாம்.

3) பெருநகர்ப் பகுதி வலையமைவு, பெபகுவ (MAN): இது நெடுந்தொலைவில் உள்ள கணிப்பொறிகளை இணைப்பது.

nexus - பிணைப்பு : ஒரு தொகுதியிலுள்ள முனை. இதில் இடை இணைப்புகள் அமையும்.

nibble - நிபிள் : 4 பிட் அலகு அதாவது நான்மி. பா. bit, byte.

nines complement-ஒன்பதின் நிரப்பு : ஒரு பதின்ம எண்ணின் 9-இன் நிரப்பைப் பெற, அந்த எண்ணிலுள்ள இலக்கங்கள் ஒவ்வொன்றையும் 9 லிருந்து கழித்து எழுதவும். கிடைக்கும் எண் 9-இன் நிரப்பு எண்ணாகும். காட்டாக, 456 என்னும் பதின்ம எண்ணின் 9-