பக்கம்:கண்ணன் திருக்கதை.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கண்ணனின் திருக்கதை ◇103



செல்வம் கொடுத்து அவனை அவன் போக்கிலேயே வளர்த்துவிட்டாள். அவன் எதையும் தன் விருப்பப்படி செய்துவருவான். சுயம்வரம் என்ற செய்தி கேட்டான். முறைப்படி அவள் விருப்பத்துக்கு உரியவனாகிக் கழுத்தை நீட்ட வேண்டியவன்; ஆத்திரத்தில் இந்தப் புறச்சடங்கு களையும், கட்டுப்பாடுகளையும் மதிக்காமல் அவளுடைய விருப்பத்தையும் எதிர்பாராமல் அவளை வலிய இழுத்துத் தேர்மேல் ஏற்றிக் கொண்டு துவாரகை நோக்கிச் சென்றான். கன்னனும், துரியனும், வீடுமரும், துரோணரும் அவனை எதிர்த்துத் தடுத்து யுத்தம் செய்தனர்.

அவன் தனி ஒருவனாய் இருந்ததால் அவர்களை எதிர்த்துக் களைத்துவிட்டான். அதனால், அவனைச் சிறை பிடித்துக் காவலில் வைத்தனர். அவனை அவர்கள் கொல்ல வில்லை. கைப்பிடித்தவனுக்கே காரிகை உரியவள் என்ற மரபு அவர்களைத் தடுத்து நிறுத்தியது. வேறு எவனும் அவளை மணக்க முன் வரமாட்டான். ஆனால் அவனைச் சிறையிலிட்டு அவன் செய்த தவற்றை நினைத்து வருந்தும் படி செய்தனர். ஆள்கள் அவனிடம் கொடுமையாய் நடந்து கொண்டனர்.

இச் செய்தியை நாரதர் கொண்டுபோய்த் துவாரகையில் பற்ற வைத்தார். யாதவர்கள் கொதித்து எழுந்தனர்; தம் அரசன் உக்கிரசேனனின் தலைமையில் படை எடுக்கத் திரண்டனர். பலராமன் இதை அறிந்தான். கலியுகம் வந்து கொண்டிருப்பதால் மக்கள் எளிதில் இயந்திரங்களாக மாறிவிடுவதை அறிந்தான். சிறுசிறு விஷயங்களுக்கெல்லாம் சண்டை போடுவதும் பிறகு தம்மை விடுவித்துக் கொள்ள வழிதெரியாமல் வேதனைப் படுவதும் இந்தப் புதுயுகத்தின் போக்காக இருப்பதை