பக்கம்:கண்ணன் திருக்கதை.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணனின் திருக்கதை ◇127



"நாங்கள் புருஷோத்தமனான o கண்ணனைக் கணவனாக அடைய வேண்டும்" என்று கேட்டனர். "அவ்வாறே ஆகுக" என்று வரம் அளித்தார். "அவர் நீரில் இருந்து கரையேறியபோது அவர் கோணலான வடிவம் கண்டு அவர்களுக்குச் சிரிப்பு வந்து விட்டது. அவரைத் தரக்குறைவாக மதித்து ஏளனமாகச் சிரித்து விட்டனர். அவரை இகழ்ந்தனர்; சிரித்தவரைப் பார்த்துச் சினந்த முனிவர், "நீங்கள் அடுத்த பிறவியின் இறுதியில் திருடர்களின் பிடியில் அகப்பட்டுத் தவிப்பீர்கள்; அவர்கள் அச்சுறுத்துவார்களேயன்றி அவதிக்கு உள்ள்ாக்க மாட்டார்கள். பின்பு நீங்கள் விரைவில் சுவர்க்கத்தை அடைவீர்” என்று சபித்தார்; அதனால்தான் இந்தத் தேவதைப் பெண்களுக்கு இக்கேடு நேர்ந்தது" என்று விளக்கினார். பின்பு அருச்சுனன் தன் சகோதரர்கள் இருந்த இடத்துக்குச் சென்று தன் பெயரனாகிய பரீட்சித்துக்குப் பட்டாபிஷேகம் செய்துவிட்டு மற்றைய சகோதரர்களோடு வனத்துக்குச் சென்றான். இறுதியில் வனத்தில் வாழ்ந்த பாண்டவர்கள் ஐவரும், பாஞ்சாலியும், ஒவ்வொருவராக மடிந்து சொர்க்கத்தை அடைந்தனர்.