பக்கம்:கண்ணன் திருக்கதை.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18 ராசீ

பட்டாளம் கிளம்பி இருக்கிறது; மக்கள் கட்டுப்பாடு இயக்கம் என்று சொல்கிறார்கள். புதிதாகப் பிறந்த குழந்தைகளைக் கொல்லக் கம்சனின் ஆள்கள் பரவியுள்ளனர்."

 "இவர்கள் கிராமத்தில் பரவமாட்டார்கள் என்று கூறமுடியாது; அந்நியர் என்று தெரிந்தால் அவர்களை அகற்றுவதற்கு வழி தேடுங்கள்; அவர்கள் மாறுவேடம் போட்டுக்கொண்டு தாறுமாறாய் நடந்து கொள்வார்கள்; மாடுகளை, எருதுகளைத் தூண்டி முட்டவிடுவார்கள்: மரத்தைச் சாய்ப்பார்கள்; வண்டிகளை உருட்டுவார்கள்; பெண்களை அனுப்பிவைத்து மயக்கிப் பொடி போட்டு ஏமாற்றுவார்கள். நீங்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்" என்று சொல்லி அனுப்பினான்.
 "உரோகிணியை நான் கேட்டதாய்ச் சொல்லவும்; பையனைப் பத்திரமாய்ப் பார்த்துக் கொள்ளச் சொல்லவும்; நான் சொன்னேன் என்று சொல்லவும்; மறக்க வேண்டா; நீங்களும் சின்னவனைக் கவனித்துக் கொள்ளுங்கள்" என்று அவன் மறையும் வரை திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தான். அதைக் கேட்க முடியாமல் மற்றவன் விடை பெற்றுச் சென்றான்.

பூதனை வதம்

 கொல்லுவதில் வல்லவர் யார்? என்று தேர்வு எடுக்க முதலில் நின்றவள் பூதனை; அவள் பல குழந்தைகளைக் கொன்று, "வைத்தியர்" என்று பட்டப் பெயர் எடுத்திருக்கிறாள்; 'சூனியக்காரி' என்று சிலரும் 'மாயக்காரி' என்று சிலரும் அவளைப் பற்றிப் பேசிக் கொண்டார்கள்; யாரும் அவளை முடியக் கண்டவர் இல்லை; மந்திரக்காரி என்று சிலர் சொல்லினர்; தந்திரத்தால் எதையும் சாதிப்பதில் வல்லவளாய் இருந்தாள்; பத்து நாள்களுக்கு முன் பிறந்த குழந்தைகளைக் கண்டுபிடித்துச் சத்தம்