பக்கம்:கண்ணன் திருக்கதை.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24 ( ராசீ ________________________________________ சர்க்கரைப் பொங்கல் என்று தெருப்புழுதியைச் சைவ பக்தர்கள் போலக் கண்ணன் வாயில் போட்டுக் கொண்டு வித்தை காட்டினான்.

அண்ணன் பலராமன், "என்னடா இது! மண்ணைத் தின்கின்றாய்; வயிற்றில் மரம் விளைந்து விடும்" என்றான்.

"பொய் சொல்கிறாய்" என்றான். குற்றவாளியைப் பிடித்துக் கூண்டில் நிறுத்துவது போல் இவனை யசோதை யின்முன் கொண்டு வந்து நிறுத்தினான்.

"என்னடா இது?" என்றாள் தாய். "மண் உண்ணி மாப்பிள்ளை' என்றான் பலராமன் அவனைப்பற்றி, "என்னடா கன்னா பின்னா என்று சொல்கிறாய்” என்று கேட்டாள் யசோதை.

"தென்னரங்கப் பெருமானா என்ன இவன் புளியோ தரை தின்ன! மண் தின்றான்" என்றான்.

"கண்ணா நீ தின்றது மண்ணா" என்று கேட்டாள்.

"பாரு பாரு பட்டணம் பாரு தேவ நகரம் பாரு பாவ நாசம் பாரு; கம்ச நாசம் பாரு"

என்று சொல்லிக்கொண்டே வாய் திறந்தான்.

"அண்ட பகிரண்டங்கள் அனைத்தும் இறைவனுள் அடக்கம்" என்ற பேருண்மையை அறிந்தாள். மனோ நிபுணர்கள் செய்யும் மாய வித்தை போல அவளுக்குத் தோன்றியது. "மண்ணுண்ட மாதவன்" என்று மற்றவர்கள் அவனைப் பாராட்டிப் பேசினார்கள்; சிறுவர்கள் அவனை எள்ளல் சுவையோடு சொல்லி அவனை ஏத்திப் புகழ்ந்தனர். அவள் மனமயக்கம் தீரும்படி அவள் மடியில் மீண்டும் தவழ்ந்து சிரித்து விளையாடிச் சின்னக் குழந்தையாய் அவன் நடந்து கொண்டான்.