பக்கம்:கண்ணன் திருக்கதை.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கண்ணனின் திருக்கதை ◇ 41


தருவார்கள் என்றும் கூறி அனுப்பினான். அவர்கள் வேள்வி முடியும் முன் யாருக்கும் சோறு போடுவதில்லை என்று கூறி மறுத்துவிட்டனர். மீண்டும் கண்ணனிடம் சென்று, இதை உரைத்தனர்; அவர்கள் இல்லங்களுக்குச் சென்று அவர் மனைவியரைக் கேளுங்கள் என்று கூறினான்; அவர்களும் அவ்வாறே போய் அவர்களைக் கேட்கக் கண்ணன் திருநாமத்தையும், பலராமன் பெயரையும் கேட்ட அளவில் அவர்கள் எல்லை இல்லா மகிழ்ச்சிகொண்டு ஆனந்த பரவசராகிச் சுவைமிக்க உணவினையும், காய்கறிகளையும், இனிப்புகளையும், சோறு குழம்பு முதலியவற்றையும் நல்ல நல்ல பாத்திரங்களில் நிரப்பிக் கொண்டு அவர்கள் இருக்கும் இடம் தேடிச் சென்று பரிமாறினர்.

அவர்கள் அங்குச் செல்லும்போது அவர்கள் உறவினர், தந்தை, கணவன், உடன்பிறந்தவர்கள் எவ்வளவு தடுத்தும் அவர்களைப் புறக்கணித்துவிட்டு மீறிச் சென்றனர்; கண்ணன்முன் அவற்றை வைத்துச் சேவித்து வணங்கிவிட்டுப் பரமானந்தம் மிக்கவர்களாய் மீண்டு சென்றனர். அவ்வுணவுகளைக் கண்ணன் அனைவர்க்கும் பரிமாறிவிட்டுத் தானும் தன் தமையனோடு அமுது செய்தான். இதே வழக்கமாக நாள்தோறும் உணவு குறிப்பிட்ட காலத்தில் அவர்கள் கொன்டு வந்து தந்து கொண்டிருந்தனர்.

தமக்கும் அவர்களால் கண்ணன் தரிசனம் கிடைத்தல் குறித்து ஆடவர்கள் மகிழ்ந்தனர்; அவர்கள் தாமும் கண்ணனிடம் செல்ல நெருங்கினர். ஆனால், கம்சனின் பகை வருமே என்று அஞ்சி ஒதுங்கி நின்றனர். கண்ணனைக் கண்டு அவனோடு ஒன்றிவிட்ட இறை உணர்வு அவர்கள் பத்தினிகளுக்குக் கிடைத்தது. வேள்வி ஆசானாகளுக்குக் கிடைக்கவில்லை. அவர்கள் சாத்திரங்