பக்கம்:கண்ணன் திருக்கதை.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணனின் திருக்கதை ◇65



அணியலாம் அல்லது பாகை அணியலாம். அவை எல்லாம் இந்த மயிற்பீலிக்கு நிகர் ஆகுமோ" "நாங்கள் இப்பொழுது பால் நிலவில் குரவைக் கூத்து ஆடுவதைவிட்டு விட்டோம்; யாரோடு நாங்கள் ஆட முடியும்; அவன் குழலோசை எங்கள் காதில் இன்னும் ஒலித்துக்கொண்டே இருக்கிறது, அந்த நாதம் மீண்டும் நாங்கள் எங்கே கேட்கப் போகிறோம்". "தேவ கன்னியர் எல்லாரும் கோகுலத்தில் பிறக்கத் தவம் செய்துகொண்டார்கள். பாவம்; அவர்கள் எல்லாம் கண்ணன் இந்த இடம் விட்டுப் போனதும் தவத்தைக் கைவிட்டு விட்டார்கள்." "கன்றுகளை அவன் மேய்த்துக் காடுகளில் திரிந்தது குன்றில் இட்ட விளக்கைப் போல எம் நினைவுகளை விட்டு அகலவில்லை." - "பாம்பின்மீது அவன் ஆடிய நடம் எங்களை வியக்கச் செய்து விட்டது; அவன் அதன் பிடியில் அகப்பட்ட போது துடித்துவிட்டோம். இவையெல்லாம் அவனுக்கு எங்கே தெரியப்போகின்றன." "மழை பொழிந்தபோது மாமலையையே அவன் குடையாகப் பிடித்தான் என்றால் எங்களுக்கு வரும் துயரைக் காப்பவன் அவன் அல்லாமல் வேறு யார் இருக்கிறார்கள்?" என்றெல்லாம் புகழ்ந்தும், வருந்தியும் பல படியாகப் பேசினார்கள். பலராமன் அவர்களைச் சமாதானப்படுத்தினான். "கண்ணன் கடமையின் காரணமாக அங்குப் போய் இருக்கிறான்; அவனுக்கு நிறைய கடமைகள் காத்துக் கிடக்கின்றன; காலத்துக்கும் அவன் இங்கே சங்கீதம் பாடிக் கொண்டிருக்கவா முடியும் ? அசுரர்கள் எங்கும்