பக்கம்:கண்ணன் திருக்கதை.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

72◇ ராசீ



விட்டது. இனிப் பிடிக்க முடியாது என்று தயங்கி நின்று விடுவது போல அவர்கள் பின் தங்கி விட்டனர். ஆனால், உருக்குமி, அவள் அண்ணன் விடுவதாய் இல்லை; எப்படியும் எல்லை வரை தொடர்வது; துவாரகை வரையும் செல்வது; தன். தங்கையை அழைத்து வந்துவிடுவது என்று பின் தொடர்ந்தான். அஃது அவனுக்கு மானப் பிரச்சனையாய் இருந்தது.

கடுமையான போர்க்குப் பிறகு கண்ணன் அவனைத் தேர் இழுக்கச் செய்தான்; நிராயுத பாணியாக ஆக்கினான். அவனைக் கொல்ல வேண்டாமென்று அவன் தங்கை கேட்டுக் கொண்டாள். அவன் படைக்கருவிகள் இழந்து விட்டான். அவனைத் தொடுவது வீரத்துக்கு இழுக்கு என்பதைக் கண்ணனும் உணர்ந்தான். உருக்குமியும் செயலிழந்து தலைகுனிந்து நின்றுவிட்டான், இவன் தான் எடுத்த முயற்சியில் அவமானப்பட்டு விட்டான். அதை மற்றவர் அறியவேண்டும் என்பதற்காகத் தலையை மொட்டை அடித்து, மீசையை எடுத்துவிட்டு அவனைத் திருப்பி ஆளைமட்டும் அடையாளம் கெட அனுப்பி வைத்தான்,

துவாரகைக்குச் சென்ற பிறகு நாளும் நேரமும் சோதிடரைக் கொண்டு குறித்து மணவிழா நடத்தினான். இதுவே கண்ணனின் முதல் திருமணமாய் இருந்தது. பலராமன் அழைப்புத் தர அவள் தந்தை பீஷ்மகன் மட்டும் திருமணத்துக்கு வந்திருந்தான். கண்ணனின் பெற்றோர்களும், நந்தரும், யசோதையும் மற்றும் உள்ள சுற்றத்தினரும் வந்திருந்தனர். உக்கிரசேனன் முன்னிலையில் இத்திருமணத்தை நடத்தி முடித்தான்.

உருக்குமணிக்கும் கண்ணனுக்கும் மகன் பிறந்தான். பிரத்தியும்னன் என்று பெயர் வைத்தனர். அவன்