பக்கம்:கண்ணன் திருக்கதை.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணனின் திருக்கதை ◇91



நரகனின் அமைச்சன் முரன் படைகளைத் திரட்டிக் கொண்டு கண்ணனை எதிர்த்தான். கண்ணன் தன் சக்கரத்தை ஏவி அவனையும் அவன் படைகளையும் அழித்தான். அரண்கள் மிகுதியாக இருந்தன. அவற்றை எல்லாம் அழித்து ஒழித்தான். முரனை அழித்ததால் கண்ணனுக்கு முராரி என்ற பெயர் வழங்குகிறது. மேலும் அயக்கீரிவன், பஞ்சசேனன் முதலிய மந்திரிகளையும் அழித்துவிட்டுச் சோதிடபுரத்துக் கோட்டைக்குள் புகுந்தான். உள்ளே புகுந்ததும் நரகாசூரனுக்கும் கண்ணனுக்கும் பெரும்போர் உண்டாயிற்று. கையில் இருந்த சக்கராயுதத்தில் அவன் சிரசைக் கொய்தான். அவனுடைய தாய் ஆகிய பூமாதேவி கண்ணனை வந்து வணங்கினாள். இந்திரனின் தாய் அதிதியின் குண்டலங்களையும் கையில் எடுத்துக்கொண்டு அவனிடம் சேர்ப்பித்து, இறைவனே! நீ வராக அவதாரம் எடுத்தபோது என்னை உன் கோட்டில் தாங்கி எடுத்து வந்தாய். அப்போது உன் ஸ்பரிசத்தினால் இந்த மகன் எனக்குப் பிறந்தான். நீயே அவனை எனக்குத் தந்தாய்; நீயே அவன் தீமைகளைக் கண்டு அழித்தாய். அவனுடைய சந்ததியர் நன்மக்கள் ஆவர். அவர்களைக் கொல்லாமல் விட்டுவிடுக. தீமைகளை ஒழித்து நன்மைகளை நிலைநாட்ட என் பொருட்டு நீ அவதரித்தாய். படைத்தல், காத்தல், அழித்தல் என்ற மூன்று தொழில்களும் வல்லவன் நீ உன்னை வணங்குகிறேன்." என்று கூறித் தன் பாதுகாப்பில் வைத்து இருந்த இந்திரனின் தாய்க்கு உரிய காதணிகளைச் சேர்ப்பித்தாள். கண்ணன் நரகன் சிறைப்படுத்தியிருந்த கன்னியர் பதின்ாறாயிரத்து நூறுபேரையும் விடுவித்தான். அவர்கள்