பாவலரேறு பெருஞ்சித்திரனார் ☐ 151
தமிழுக்குக் கேடுகள் செய்யும் - இழி
8
தாள் களை நூல்களைத் தடைசெயக் கேட்போம்!
அமைவுடன் ஒப்பில ராயின் - உள்ள
அனைத்தையும் வாரி நெருப்பினில் தீய்ப்போம்!
விளம்பரப் பலகையில் காணும் - பல
9
வேற்று மொழியினை மாற்றிநந் தமிழில்
வளம்பட எழுதிடக் கேட்போம்! - ஒத்து
வரவில்லை என்றாலோ புறம்பெயர்த் தெறிவோம்!
வானொலி யில் தமிழ் வீழ்ச்சி - பல
10
வாண்டுகள் தொடர்ச்சியாய்ச் செய்திடும் சூழ்ச்சி,
ஏனென முன்சென்று கேட்கும் - வீர
இளைஞர்கள் சிலர்வரின் அப்போதே தோற்கும்!
தப்புகள் ஊழல்கள் கேட்போம் - நல்ல
11
தரங்கெட்ட வாணிகம் புறங்கெடச் செய்வோம்!
துப்புகள் அரசுக்குத் தருவோம்! - உயர்
தோதுகள் செய்திட ஏதுகள் சொல்வோம்!
தீமையை முன்னின்று தீய்ப்போம்! - ஊர்த்
12
திருடர்கள் பலரஞ்சும் படி, தட்டிக் கேட்போம்!
ஊமைகள் ஏழையர்க் கண்டே - பல
உண்மைகள் கூறி உயர்ந்திட வைப்போம்!
கட்சிகள் சாதிகள் இன்றி - நல்ல
13
கருத்தொடு பொதுநலம் கருதி நடக்கும்
அச்சமில் லாதஉள் ளங்கள் - ஓர்
ஆயிரம் இருந்திடில் அனைத்தும் நடக்கும்!
புத்தமிழ் நாடுகாண் போரே! - ஒரு
14
புரட்சிசெய் தேநலம் புதுக்கிடு வீரே!
தத்திரி கிடதமி தோம்தோம் - தமி
தாந்திமி கிடதிமி தரிகிட தோம்தோம்!