பக்கம்:கனிச்சாறு 2.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

௨௨

கனிச்சாறு இரண்டாம் தொகுதி


74. பாவேந்தர். பெரியார், பாவாணர் போன்று பாவலர்களும், தலைவர்களும், அறிஞர்களும் இருந்து எழுதவும், பேசவும், ஆய்வு செய்யவும், “இப்பொழுதே எழாமற் போனால் எப்பொழுது நீ எழுவது?” என்று தமிழரைக் கேட்பது.

75. வெற்றுப் பொய். புளுகு இலக்கியங்களில் மனத்தைப் பறிகொடுக்காமல் செயல்படவேண்டும் என்று தமிழர்களை அழைப்பது.

76. தமிழனைத் தமிழனே அழிக்க முற்பட்டாலும் இன நலம் கருதிப் பொறுத்துக்கொள்ள வேண்டும் என்பது.

77. தமிழ்த்தொண்டர் பின்பற்றுதற்குரிய தகவுரைகள்.

78. ஆரியப் பார்ப்பனர் தம் இனத்தை முன்னேற்றுவதற்கு ஒருவர்க்கொருவர் எவ்வளவோ விட்டுக்கொடுத்துப் போகின்றனர். தமிழர்கள் அவ்வாறில்லையே, அந்த நிலை மாறினாலன்றோ தமிழர்க்கு உய்வு! - என்கிறது பாடல்.

79. கட்சி நிலைகளில் தமிழன் எங்கிருந்தாலும் தன் இன நலத்தை மறந்துவிடக் கூடாது என்று அறிவுறுத்துகின்றது இப்பாட்டு.

80. 1973இல் மதுரையில் நடைபெற இருந்த தென்மொழிக் கொள்கைச் செயற்பாட்டுத் தமிழக விடுதலை மாநாட்டிற்கு முன்பாக, பாவலரேறு ஐயா அவர்களைச் சிறப்பாசிரியராகக் கொண்டு திரு. க.வே. நெடுஞ்சேரலாதன் முயற்சியால் வெளிவந்த ‘தீச்சுடர்’ எனும் இதழில் எழுதப்பெற்றது. தமிழின உணர்வையும், விடுதலையின் தேவையையும் உள்ளடக்கி எழுதப் பெற்ற இசைப்பாடல் இது.

81. இற்றைநாள் இளைஞர்கள் தமிழுணர்வு கொள்ளவேண்டும் என்பது.

82. சிங்கை மலையகச் செலவின்பொழுது எழுதி விடுத்தது. தமிழர் எந்த நாட்டிற்குச் சென்றாலும் தம் சாதி மத இழிவுகளைக் கைவிடாமல் பற்றியிருப்பதை வருந்திக் கூறியது இது.

83. இதுவும் சிங்கை மலையகச் சுற்றுச் செலவின்பொழுது எழுதி விடுத்தது. உலகெங்கும் உள்ள தமிழர்கள் ஒன்றாய் இணைந்து தமிழர் விடுதலைக்கு உழைக்க வேண்டும் என்பது. 84. சிலைகளை ஊருக்கொன்றாய் ஊன்றுவதில் பயனில்லை. அடிப்படை விளைவுகளை விளைவிப்பதே தமிழர்க்குப் பயன் தருவதாகும் என்று அறிவிப்பது.

85. 1975-இல் சென்னைச் சிறையில் இருந்த விடுதலை மறவர்களில் தென்மொழி மறை நித்தலின்பனாரும் ஒருவர். (கனிச்சாறு முதல்தொகுதி 45ஆம் பாடற்குறிப்பைப் பார்க்க.) அவர் சிறையிலிருந்த பொழுது அவர் தாய் கடுமையாக நோய்வாய்ப்பட்டுக் சாப்படுக்கையில் கிடக்கின்றார் என்ற செய்தி வந்தது. அச் செய்தியுடன் அவர் துணைவியாரின் தலைப்பேற்றுக்கு நாள் அண்மி வந்ததால், அவரும் தம் கணவர் அருகிருக்க விரும்புகின்றார் எனும் செய்தியும் வந்தது. தம் பொறுப்பில் நித்தலின்பனார் விடுதலையாகலாம் எனினும் அவர் வெளியேற மறுத்துச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_2.pdf/23&oldid=1437284" இலிருந்து மீள்விக்கப்பட்டது