பக்கம்:கனிச்சாறு 2.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  235


161

தமிழ்நாட்டு ஆட்சி!


கள்ளச்சா ராயம் விற்கும்
கயவரைக் கைக்குள் போட்டு,
நொள்ளைத் திரைப்ப டத்துத்
தொழும்பர்க்குச் சலுகை காட்டி,
வெள்ளையாய்க் கொஞ்சம், அட்ட
கறுப்பினில் வயிறு மிஞ்சக்
கொள்ளைய டிப்பார் செய்யும்
கூத்துக்கே ஆட்சி - என்பார்!

தொழு(து) உதை காலில் வீழ்ந்தால்
முதல்வர் கை தோள்மேல் வீழும்!
விழுதையும் மரம் என் பார்கள்,
மாண்புகள், விருந்து போட்டால்!
பழுதையும் பரிசு வாங்கும்
பரிந்துரை முதல்வர் செய்தால்!
கழுதையும் ‘டாக்டர்’ ஆகும்
ஆளுநர் கடைக்கண் வைத்தால்!

மருள்மன மக்கள் தம்மை
மயக்கிடும் தலைவர் கூட்டம்!
இருள் பொதி விழா வே டிக்கை!
ஏமாற்றும் சட்ட திட்டம்!
உருள்கின்ற பதவிச் சண்டை!
ஒவ்வொரு நாளும் கோடிப்
பொருள்தரும் சுரண்டல் செல்வர்!
புரிந்ததா? தமிழ்நாட் டாட்சி!

-1992
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_2.pdf/271&oldid=1437482" இலிருந்து மீள்விக்கப்பட்டது