பக்கம்:கனிச்சாறு 2.pdf/283

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  247


கழுதை தேய்ந்து கட்டெறும் பாகி
முழுதும் அதுதேய்ந்து சிற்றெறும் பாகி 130
இறுதியாய் ஒன்றும் இல்லாமற் போன
உறுதியைப் போல்தான் தமிழ்நாட்டு உருவம்!

ஒருபுறம் வடவர்; உட்புறம் பார்ப்பனர்,
தெருப்புறம் கன்னடர், தெலுங்கர் என்றாகிக்
கொல்லையில் கேரளர், கொடும்பட்டாணியர்
தொல்லைபஞ் சாபியர் சூழ்நிலம் தமிழ்நிலம்!
இன்றிவர்க் கிடையில்தான் எந்தமிழ் மக்கள்
நின்றாலும் படுத்தாலும் வாழ்க்கை நிகழ்த்துவர்!

இந்த நிலையினில் எந்தமிழ் வளருமா?
இந்தச் சூழலில் இனம்முன் னேறுமா? 140
பொதுமை மலருமா? புதுநலம் பூக்குமா?
எதுதவறு, எதுசரி? எண்ணவேண் டாவா?

இவ்வாறே இருந்தால் எந்தமிழ்மொழியும்
ஒவ்வொரு நாளும் உருக்குலை இனமும்
நந்தமி ழகமும் நலிந்து நலிந்தே
இந்த உலகில் இல்லாமற் போகுமே!

ஆகவே, தமிழரே அறுதியாய் உரைப்பேன்!
சாகவே எனினும் ஒருங்குறச் சாவோம்!
உரிமை உரிமை உரிமை முழக்குவோம்!
நரியிடத் திருந்துநாம் நாடுபெறு வோமே! 150

-1994
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_2.pdf/283&oldid=1437495" இலிருந்து மீள்விக்கப்பட்டது