பக்கம்:கனிச்சாறு 2.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  23

விளையாட் டெல்லாம் போரன்றோ?
வெற்றி நின்தோள் தொடையன்றோ?
மூட்டுக் கொண்ட என்புநிமிர்!
முறுக்கே றட்டும் நின்கைகள்!
மூவா இளமைத் தமிழ்மகனே!
முனைவாய், எழுக, எழுகவே! -9

கறங்குக முரசம்! வெண்சங்கம்!
கரடிகை பம்பை உறுமுகவே!
காட்டுப் புலியே! நீவளர்த்த
கன்னித் தமிழ்க்குன் உயிர்செகுப்பாய்!
பிறங்குக நின்பேர்! திறம்பூண்க!
பெரிதோ பிறன்கை வெண் சோறு!
பிறந்தாய் அன்றே இறந்தாய் நீ!
பேசா அடிமை வாழ்வதுவோ!
இறங்குக உரிமைத் தனிப்போரில்!
ஏடா! இளமைத் தமிழ்மகனே!
இறப்பினும் சுவையோ இழிவாழ்க்கை?
இருகண் மூடிச் செவிமூடி
உறங்குதல் நன்றோ இதுபோழ்தே!
உணர்வாய் எழுக எழுகவே!
ஒட்டாப் போக்கை உடன்வெட்டி
உகுப்பாய்! எழுக எழுகவே! -10

-1959
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_2.pdf/59&oldid=1424656" இலிருந்து மீள்விக்கப்பட்டது