பக்கம்:கனிச்சாறு 2.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  27


செந்தமி ழேஉயிர் மூச்சு - அதன்
சிறப்பும் உயர்வுமே நம்பெரும் பேச்சு!
செந்தமி ழேஉயர் வாழ்வு - அது
சிதைந்திடில் நாமெல் லவர்க்குமே தாழ்வு!
முந்தை வளம்பல கூறி - வெறும்
மூங்கைச் செயல்பல கூறிடுவோரே,
எந்தமிழ் காக்கமுன் நிற்பீர்! - அதற்
கேற்ற பணிகளைச் செய்குவீர் இன்றே!

-1959


17  வாழ்கின்றாரே!

விழியிருக்கும் இருசுடராய்! விளைவிருக்கும்
பா தமிழகத்தின் வீழ்விருக்கும்!
மொழியிருக்கும் நிலையினையும் முன்னிருந்த
நிலையினையும் எண்ணில், மாற்றார்
பழியிருக்கும்! தூய்தமிழர் நெஞ்சிலெலாம்
பதைப்பிருக்கும்! பாழ்மைநீக்க
வழியிருக்கும்! குனிதொழிலால் வயிற்றிருக்கும்
குடல் நிரப்பி வாழ்கின்றாரே!

-1959
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_2.pdf/63&oldid=1424660" இலிருந்து மீள்விக்கப்பட்டது