இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
70 ☐ கனிச்சாறு - மூன்றாம் தொகுதி
70 தமிழ் நாட்டின் உரிமை மீட்போம்!
தமிழை மீட்க வேண்டும் - தமிழ்
இனத்தை மீட்க வேண்டும்!
கமழக் கமழத் தமிழன் நாட்டைக்
கடிதில் மீட்க வேண்டும்!
அமிழப் போவதில்லை - வேறு
ஆசை நமக்கிங் கில்லை!
இமையும் பொறுப்ப தில்லை - முன்
இழந்த உரிமை வேண்டும்!
வடவன் மொழியும் வேண்டா - அவன்
வழியும் நமக்கு வேண்டா!
வடவர் ஆட்சி வேண்டா - நாம்
வாழ உரிமை வேண்டும்!
பொறுத் திருந்து விட்டோம் - பூனை
போல் வாழ்ந்து விட்டோம்!
வெறுத்து விட்ட தாட்சி - தமிழ்
வீர வாழ்க்கை வேண்டும்!
கோழை யாகப் போனோம் ஊமைக்
குருட ராக வாழ்ந்தோம்!
ஏழ்மை தொலைய வில்லை - தமிழ்
நாட்டின் உரிமை மீட்போம்!
-1993