பக்கம்:கன்னியாகுமரி அன்னை மாயம்மா.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்த நூலே முடிக்கும் நேரத்தில் ஒரு நிகழ்ச்சியைச் சொல்லி விடுகிறேன் மாயம்மா பற்றிய சிறு குறிப்பு ஒன்றை வெளியிட வேண்டும் என்ற என் ஆசையை நிறைவேற்ற அம்மாவி டம் சென்றேன். நேசம் கிடைத்த போது அம்மாவிடமே இருந்தேன். மூன்று மாதங்களில் பல மணி நேரங்கள் அம்மாவிடம் வரும் அன்பர்களின் செய்கைகளைப் பார்த்தேன். அம்மாவைத் தெரிந்த அன்பர்கள் பலரிடம் அம்மா வைப் பற்றிக்கேட்டேன். மூன்று மாதங்களாகநான் சேக சித்த குறிப்புக்கள் முழுமையானது என்ற எண்ணம் எனக்கு வரவில்லை. அம்மாவை முழுமையாக உணர்ந்து நூலே எழுதுவது என்பது அலை ஒய்ந்து நீராடலாம் என்பது போலத் தான். ஆதலால், கிடைத்ததை வைத்து நூலை எழுது வோம், எழுதுவதற்கு அம்மாவின் ஆசிர்வாதம் கிடைக் கிறதா என்று பார்ப்போம் என எண்ணி அம்மாவிடம் சென்றேன். மாலை தான்கு மணியளவில் அம்மாவைக் கண்டேன். அம்மா குப்பைகளைக் குவித்துத் தீ மூட்டிக் கொண்டிருந் தார். இரவு ஏழு மணி வரை தீயின் அருகில் இருந்தார். நிலவின் ஒளி பரந்த கடலில் பட்டுத் தெறித்துக் கொண்டிருந்தது. குப்பைகள் சாம்பலானதும் ஒலைக் கு டி லுக் கு ச் சென் ருர்; நானும் கூடவே சென்றேன். குடிசையில் ஒரு மண்ணெண்ணை விளக்கு தொங்கிக் கொண்டிருந்தது. அம்மா மரக்கட்டிலின் மீது அமர்ந்திருந் தார். இராஜேந்திரன் அம்மாவின் கையில் பீடியைப் பற்ற