பக்கம்:கன்னியாகுமரி அன்னை மாயம்மா.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- 2 - தத்துவ ஞானி ஜே. கிருஷ்ணமூர்த்தியின் சிந்தனைகளில் யான் மூழ்கி இருந்தாலும் பழமை பாரத்தினின்றும் மெல்ல மெல்லவே விடுதலை பெற வேண்டியுள்ளது! மாலை ஆறு மணி இருக்கும். பொழுது இருட்டிக் கொண்டிருந்தது. பேருந்திலிருந்து இறங்கியதும் கோவி லுக்குள்ளும் நுழையாமல் வலப் புறமாக மாயி இருக்கும் கடற்கரை குடிசையை நோக்கி கால்கள் விரைந்தன. கொஞ்சதுராம் சென்றதும் அம்மாவிற்கு ஏதும் வாங்கிக் கொண்டு போகவில்லையே' நாய்களுக்குக் கொடுத்து விட்டு தமக்கும் கொடுப்பார்களே!, என்று நினைத்தேன். உடனே வந்த வழியே திரும்பி சில அடிகள் தொலைவி லுள்ள ஒரு சிற்றுண்டிக் கடையில் மூன்று வடைகளை மட்டும் வாங்கிக் கொண்டு வெளியேற முற்பட்டேன். கடைப் படிகளுக்கு முன்பு பட்டிகள்’-ஆம் நாஞ்சில் நாட்டு நன் மொழியில் நாய்கள் கூட்டமொன்றைக் கண்டேன். உடனே ஒகோ! என்ன இத்தனை நாய்கள் இருக்கின்ற னவே! மாயி இங்கு தான் இருக்கிருர்களோ என்று சுற்றும் முற்றும் பார்த்தேன். ஆம், 'யானை வரும் பின்னே; மணி யோசை வரும் முன்னே' என்ற பழமொழியைப் போல் நாய்கள் முன்னே வர நற்ருய் பின்னே வந்து கொண்டி ருந்தார்கள். என் வியப்பு விலகும் முன்னே மாயி கடைக் குள் என் விழிகளில் விழி செலுத்தாமலே ஒரு நோக்காய் உள் நுழைந்தார்கள், கடைக்குள்ளிருந்த இளைஞர்கள் புதுநகை பூத்தனர்; காய்த்தனர்; கனிந்தனர். காசு கொடுக்க வேண்டும்; பில் பில் (Bill) என்று ஒருவர் மாயியின் மாய மந்திரக் கையைப் பிடித்து இழுத்தனர். இன்னுெருவர் அன்னை யாரின் நீலக்கம்பளிக் குல்லாவை நீக்கிப் பார்த்தார். மற் ருெருவர் எனக்கு ஆசி சொல்ல வேண்டும், என்று கூனிக் குறுகி கூசிக் குழைந்து நெளிந்து நடித்தார். எல்லாவற்றையும் கடந்து-எதிலும் கலவாமல் கருமமே கண் ணுக இருந்த கன்னியாகுமரித் தாய், கிடைத்த பூரி