பக்கம்:கபோதிபுரக்காதல்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10

கபோதிபுரக்


சாரதாவின் கண்கள், பரந்தாமனைவிட்டு அகலவில்லை. பரந்தாமன் பதுமைபோல நின்றான்.

வண்டி அசைந்தது. சாரதாவின் தலையும் கொஞ்சம் அசைந்தது. அவளுடைய செந்நிற அதரங்கள் சற்று அசைந்தன. அலங்காரப் பற்கள் சற்று வெளிவந்தன அவளையும் அறியாமல். புருவம் வளைந்தது. கண் பார்வையிலே ஒருவிதமான புது ஒளி காணப்பட்டது. வண்டி சற்று ஓட ஆரம்பித்தது. பரந்தாமனின் கண்களில் நீர் ததும்பிற்று. வண்டி இரயிலடியைவிட்டுச் சென்றுவிட்டது. பரந்தாமன் கன்னத்தில் இரு துளி கண்ணீர் புரண்டு வந்தது. நேரே வண்டிக்குச் சென்றான். வைக்கோல் மெத்தைமீது படுத்தான், புரண்டான். சாரதாவை நான் ஏன் கண்டேன்? என்று கலங்குவது ஏன், என்று மனத்தைத் தேற்றினான்.

சாரதா, நீ ஏன் அவ்வளவு அழகாக இருக்கிறாய்! என் கண்களை ஏன் கவர்ந்துவிட்டாய்; அழகி, என் மனத்தைக் கொள்ளை கொண்டாயே, என்னைப் பார்த்ததோடு விட்டாயா? எனக்கு ‘அமிர்தம்’ அளித்தாயே. இரயில் புறப்படும்போது என்னைக் கண்டு சிரித்தாயே. போய்வருகிறேன் என்று தலையை அசைத்து ஜாடை செய்தாயே. நீ யார்? ஏன் இங்கு வந்தாய்? வண்டியோட்டும் எனக்கு ஏன் நீ எதை எதையோ எண்ணும்படிச் செய்துவிட்டாய். சாரதா உன்னை நான் அடையத்தான் முடியுமா? எண்ணத்தான் படுமோ?—என்று எண்ணினான். இரண்டு நாட்கள் பரந்தாமனுக்கு வேறு கவனமே இருப்பதில்லை. எங்கும் சாரதா! எல்லாம் சாரதா! எந்தச் சமயத்திலும் சாரதாவின் நினைப்புதான்! இளைஞன் படாதபாடுபட்டான். பஞ்சில் நெருப்பெனக் காதல் மனத்தில் புகுந்து அவனை வாட்ட ஆரம்பித்துவிட்டது. அதிலும் கைகூடும் காதலா? வண்டியோட்-