பக்கம்:கபோதிபுரக்காதல்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18

கபோதிபுரக்


வண்டி பூட்ட, ஓட்ட ஆள் வைத்திருக்கிறேன். அவனையும் ஒழுங்காக வேலை வாங்கு. இரு இங்கேயே” என்று கூறினார். காரியஸ்தன் கருப்பையாவும் இந்த யோசனையை ஆதரித்தான். வேதவல்லியும் இது நல்ல யோசனை என்றாள். பரந்தாமன், “சரி பார்ப்போம்” என்று கூறினான். அவனுக்கு தான் காதலித்த சாரதா, ஒரு கிழவனின் மனைவியாக இருப்பதைக் கண்ணாலே பார்த்துக்கொண்டிருக்க இஷ்டமில்லை. சாரதாவுக்கு உடம்பு சரியாகும் மட்டும் இருந்துவிட்டு, ஊர் போய்ச் சேருவது என்று முடிவு செய்தான்.

சாரதாவுக்கு ஒரு நாட்டு வைத்தியர் மருந்து கொடுத்து வந்தார். ஜூரம் குறையவில்லை.

இரண்டு நாட்களுக்குப் பிறகுதான் ஜூரம் விட்டது. ஆனால் களைப்பும் இருமலும் அதிகமாக இருந்தன. அன்று மருந்து வாங்கிக்கொண்டு வர பரந்தாமனையே அனுப்பினார்கள். வைத்தியர், வீட்டை விசாரித்துக்கொண்டு வந்து சேர்ந்தான். வைத்தியர், சற்று வெறியில் இருந்தார். அவர் கொஞ்சம் ‘தண்ணீர்’ சாப்பிடும் பேர்வழி. எனவே, அவர் கிண்டலாகப் பேசினார். இது பரந்தாமனுக்குப் பிடிக்கவில்லை.

“வாய்யா, வா! என்ன மருந்துக்கு வந்தாயா! யாருக்கு? சாரதாபாய்க்குத்தானே” என்று ஆரம்பத்திலேயே கிண்டலாகப் பேசினான்.

“ஆமாம் வைத்தியரே, பாவம் கலியாணமானதும் காய்ச்சல் இப்படி வந்துவிட்டது சாரதாவுக்கு” என்றான் பரந்தாமன்.

“ஏனப்பா வராது. ஏன் வராது சொல்லு? பெண்ணோ பதுமைபோல ஜிலுஜிலுன்னு இருக்கிறாள். பருவமோ ஜோரான பருவம். புருஷனாக வந்த ஆளோ ஒரு கிழம். இதைக்கண்ட பெண்ணுக்கு வருத்தம்